நகர மறுக்கும் சடலம், ஆணவக்கொலை பின்னால் உள்ள சம்பிரதாயம்.. 2k கிட்ஸ் பேவரைட் NP நடிப்பில் எமகாதகி ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Yemakadhagi
Yemakadhagi

Yamakadhagi: எமகாதகி என்னும் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியிருக்கிறது. படத்தின் பெரிய பாசிடிவ் 2k கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோ NP. இதை தாண்டி படத்தின் கதையும் ரொம்ப அழுத்தமானது.

ட்ரெய்லர் வீடியோவின் ஆரம்பத்தில் ஊரில் திருவிழா நடக்கப்போவதை அறிவிக்கிறார்கள்.

கதாநாயகியின் வீட்டில் இருக்கும் வயதான பாட்டில் எப்போதுமே பூட்டி இருக்கும் ஒரு அரை கதவை முறைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

NP நடிப்பில் எமகாதகி ட்ரெய்லர்

அடுத்த காட்சியில் ஹீரோயின் ரூபா மற்றும் ஹீரோநரேந்திர பிரசாத்துக்கான காதல் காட்சிகள்.

அதன் பின்னர் காதல் விஷயம் தெரிந்த வீட்டில் பிரச்சனை நடக்கும்போது ஹீரோயின் அந்தப் பூட்டி இருந்த கதவை திறக்கிறார்.

இதனால் தொடர்ந்து வீட்டில் கெட்ட விஷயங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஹீரோயின் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

ஹீரோயின் உடைய பிணத்தை ஒரு இரவு முழுக்க வைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். ஹீரோயின் மரணத்தால் அந்த கிராமத்தில் அடுத்தடுத்து கெட்ட விஷயங்கள் நடக்கிறது.

ட்ரெய்லர் வீடியோ முடியும்பொழுது இறந்த பிணம் எழுந்து உட்காருகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு இந்த ட்ரெய்லர் ஒன்று போதாதா. இந்த படம் வரும் ஏழாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner