அப்படி என்ன வெற்றிமாறன் செஞ்சிட்டாருன்னு இந்த ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர்ல அவர் போட்டு அடிச்சி வெளுத்துகிட்டு இருக்காரு. அதுவும் ஒரே எம்ஜிஆர் மந்திரமா இருக்கு. அதனால ப்ளூ சட்டை மாறன் என்ன லாபம் வந்துச்சு?
வெற்றிமாறன் இயக்கத்தில் வரப்போற விடுதலை 2 படத்தால் தான் இந்த பிரச்சினை ஆரம்பிச்சு இருக்கு. விடுதலை படத்துல வர முக்கியமான வாசகம் “தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்கள் தான் உருவாக்க முடியும் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது” அப்படின்னு வெற்றிமாறன் ஒரு வசனத்தை எழுதி போட்டார். அவ்ளோதான் கிளம்பியது பஞ்சாயத்து.
நிறைய பேரு இது விஜய்க்கு சொன்ன மாதிரி எடுத்துக்கிட்டாங்க அதனால விஜய் ரசிகர்கள் வெறியோட இருக்காங்க. அப்புறம் நம்ம ப்ளூ சட்டை மாறன் கொஞ்சம் அதிக கோவமாதான் இருக்காரு போல. நடிகர்களை பத்தி சொன்ன உடனே திடீர்னு ப்ளூ சட்டை மாறன் ரொம்ப கோவமா ட்விட்டரில் நான் ஸ்டாப்பாக வெற்றிமாறனுக்கு எதிரா ட்வீட் போட்டுட்டு இருக்காரு.
இதுல அவருக்கு என்ன லாபம்? மக்கள் மேல கொஞ்சம் அக்கறை இருந்தாலும் முக்கியமா எலான் மஸ்க் ட்விட்டர்ல கொடுக்கிற வருமானம்தான் எல்லாத்துக்கும்மேல பெரிய காரணம்.
என் டிவீட்டுக்கு நீ திட்டி போடுவியோ இல்ல ஆதரவு கொடுத்து போடுறியோ ஏதோ கமெண்ட் பண்ணாலே போதும். அதுதான் ஒரே எண்ணம். அந்த கமெண்ட்டுக்கு வர வருமானம் யூடியூபை விட அதிகம். இதனாலதான் ப்ளூசட்டை மாறன் போன்ற திறமை உள்ளவர்கள் கூட முழு நேர தொழிலாக ட்விட்டரே கதி என இருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த ட்விட்டர் நண்பனையும் எதிரி ஆக்கும் எதிரியையும் நண்பன் ஆக்கும்.