வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உப்பு சப்பு இல்ல, கோவில் கோவிலா போனா மட்டும் படம் ஓடுமா.? விஜய், சமந்தாவின் குஷியை பஞ்சர் செய்த ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maaran-Kushi: உங்க வாயில நல்ல வார்த்தையே வராதா என்று நாம் சிலரிடம் கேட்போம். அப்படி சில பிரகஸ்பதிகள் நெகட்டிவாக பேசுவதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

எந்த படம் வந்தாலும் அதில் குறையை மட்டுமே பெரிதாக பேசுவது தான் இவருடைய ஸ்பெஷல். அதிலும் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலரை ஊரே கொண்டாடும் போது இவர் ஒருவர் மட்டும்தான் வண்டி வண்டியாக குறையை சொல்லி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்.

Also read: முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

அதேபோல் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் நேற்று வெளியான குஷி படத்தையும் இவர் தாறுமாறாக கலாய்த்து தள்ளி இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதையாக பலரையும் ஃபீல் செய்ய வைத்திருக்கும் இந்த படம் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் லவ் கெமிஸ்ட்ரி அதையெல்லாம் மறக்கடித்து விட்டது. ஆனால் ப்ளூ சட்டை மாறன் கோவில் கோவிலாக சென்றால் ஒரு படம் ஓடிவிடுமா, திரைக்கதை நன்றாக இருந்தால் தான் வரவேற்பு கிடைக்கும் என்று பங்கம் செய்துள்ளார்.

Also read: விஜய் தேவரகொண்டா-சமந்தா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? குஷி எப்படி இருக்கு, அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மேலும் குஷி உப்பு சப்பு இல்லாமல் இருக்கிறது. படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை, ஹீரோ மட்டும்தான் நன்றாக நடித்திருக்கிறார் என்று மொத்தமாக பஞ்சர் செய்து இருக்கிறார். இதன் மூலம் குஷி ஃபெயிலியர் ஆயிடுச்சு என்று கூறி பட குழுவினருக்கு அதிர்ச்சியையும் தாராளமாக வழங்கி இருக்கிறார்.

அவருடைய இந்த விமர்சனத்திற்கு வழக்கம் போல ரசிகர்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் கொடுத்து வருகின்றனர். அதிலும் சமந்தாவின் ரசிகர்கள் இவரை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருக்கும் இப்படம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் இந்த நேரத்தில் ப்ளூ சட்டையின் விமர்சனம் அதை கெடுக்கும் விதமாக இருக்கிறது.

Also read: Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News