வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி ஒரு சங்கின்னு பச்சையா தெரியுது.. தலைவரை போட்டு பொளந்த ப்ளூ சட்டை

Blue Sattai Maaran Teased Rajini: சூப்பர் ஸ்டாரை நக்கல் அடிப்பது என்றாலே ப்ளூ சட்டை மாறனுக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும். அப்படித்தான் தற்போது லால் சலாம் படத்தையும் அவர் தாறுமாறாக விமர்சித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் ரஜினியையும் அட்டாக் செய்திருக்கிறார்.

அந்த வகையில் லால் சலாம் படத்தின் தோல்விக்கு ரஜினி தான் காரணம் என்று அவர் சொல்லி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடித்தால் தான் அது ஆரஞ்சு என்று தெரியுமா? என ஐஸ்வர்யாவிடம் நக்கலாக ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் போது ஐஸ்வர்யா தன் அப்பாவை சங்கி என்று கூறுவது பற்றி பேசி இருந்தார். அதை கிண்டல் அடித்திருக்கும் ப்ளூ சட்டை ரஜினி ஒரு சங்கி என பச்சையாக தெரிகிறது. எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிற மாதிரி ஐஸ்வர்யா ஆடியோ லான்ச் விழாவில் இதைப் பற்றி சொன்னார்.

Also read: தியேட்டரையே தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்.. அள்ள அள்ள குறையாத லால் சலாம் முதல் நாள் வசூல்

அதற்கு மறுநாளே ரஜினி ஏர்போர்ட்டில் சங்கி ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தை கிடையாது என சொன்னார். இப்படி எல்லாம் சொல்லிவிட்டு படத்தில் மத நல்லிணக்கம் பற்றி பேசுவது சரியா? கிரிக்கெட் விளையாடும் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அப்ப எல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப லால்சலாம் படத்தில் ரஜினி கிரிக்கெட்ல ஏது மதம்? என பேசி இருப்பது ஏமாற்று வேலைதான். இதைத்தான் ரசிகர்களும் இத்தனை வருடம் நம்புகிறார்கள் என ரஜினியை போட்டு பொளந்து இருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவரை வழக்கம் போல கிழி கிழி என கிழித்து வருகின்றனர்.

Also read: ரிலீசுக்கு முன்னாடியே லால் சலாம் தோல்விதான்.. மொத்தமாக சோலியை முடித்த ப்ளூ சட்டை விமர்சனம்

Trending News