திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

8-வது அதிசயமால்ல இருக்கு.. அஜித்துக்கு புகழாரம் சூட்டிய ப்ளூ சட்டை, காரணம் இதுதான்

Actor Ajith-Blue Sattai Maaran: ப்ளூ சட்டை மாறன் என்றாலே நம் நினைவுக்கு வருவது விமர்சனம் தான். படத்தை பற்றி மட்டுமல்லாமல் ஹீரோக்களை பற்றியும் தாறுமாறாக விமர்சிப்பது தான் இவருடைய முக்கியமான வேலை. அதனாலேயே இவர் ரசிகர்களிடம் நன்றாக வங்கி கட்டிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

ஆனாலும் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற ரேஞ்சில் தொடர்ந்து இவர் அலப்பறையை கூட்டிக் கொண்டு தான் இருக்கிறார். அதிலும் அஜித், ரஜினி போன்ற ஹீரோக்களை வம்புக்கு இழுப்பது என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

Also read: ஐசியுக்கு போன ஃபேன்ஸ்.. ஒரு நியாயம் வேண்டாமா நெல்சா? பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டையின் விமர்சனம்

அந்த வகையில் இவர் அஜித்தை பற்றி பல மோசமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் அதிலும் அவரை உருவ கேலி செய்து இவர் போட்ட பதிவுகளுக்கு ரசிகர்கள் கடும் கோபம் கொண்டு பதிலடி கொடுத்தனர். இப்படி தொடர் எதிர்ப்புகளை சம்பாதித்த ப்ளூ சட்டை இப்போது அஜித்துக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் என்றால் யாராலும் நம்ப முடியாது தான்.

ஆனால் வேறு வழியில்லை இதை நம்பித்தான் ஆக வேண்டும். அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது அஜித்தின் வேதாளம் படம் தெலுங்கில் சிரஞ்சீவியின் நடிப்பில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

Also read: ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

அதைப்பற்றி விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், ஒரிஜினல் வேதாளம் படம் பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதையை பொருத்தவரை சுவாரசியமாக இருக்கும். அதிலும் இடைவேளை காட்சியில் அஜித்தின் நடிப்பு ரசிக்கும் படி ரொம்பவும் பிரமாதமாக இருக்கும். ஆனால் அதில் கொஞ்சம் கூட சிரஞ்சீவி நடிக்கவில்லை.

அஜித் நடித்ததை போன்று நடித்தால் க்ரிஞ்சாக மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டு படு மொக்கையான காட்சிகளை வைத்திருக்கின்றனர். இந்த ஒரு காட்சி தான் மொக்கை என்று பார்த்தால் முழு படமும் அப்படித்தான் இருக்கிறது என்று போலா ஷங்கர் படத்தை ப்ளூ சட்டை கழுவி ஊற்றி இருக்கிறார். அந்த வகையில் 8வது அதிசயமாக ப்ளூ சட்டை மாறன் அஜித்தை புகழ்ந்து இருப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Also read: விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

Trending News