விஜய் சேதுபதியை கடுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்.. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!

திரையுலகில் மக்கள் செல்வனாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவருடைய திரைப்படங்களுக்கு சமீப காலமாக வரவேற்பு என்பது பெரிதாக கிடைப்பதில்லை.

அந்த வகையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு பெற வில்லை.

இதனால் பலரும் விஜய் சேதுபதி பற்றி பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். அதில் ப்ளூ சட்டை மாறன் கொஞ்சம் அதிகமாகவே விமர்சனம் செய்து கலாய்த்திருக்கிறார். சினிமாவில் இருக்கும் முன்னணி பிரபலங்களை பற்றி ஏதாவது குறை சொல்லி பிழைப்பு நடத்திவரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் சேதுபதியையும் வம்பு இழுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, மாமனிதன் திரைப்படம் தியேட்டரில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் இனி விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டர் தான் செட் ஆகும். அவர் வில்லனாக நடிக்கலாம், ஆனால் ஒரு ஹீரோவாக சினிமாவில் இனிமேல் வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் தற்போது டிவிட்டர் தளமே பரபரப்பாக இருக்கிறது. மேலும் ரசிகர்கள் யார் எப்படி கலாய்த்தாலும் விஜய் சேதுபதி எங்கள் மனதில் என்றும் ஹீரோதான் என அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.