சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நீங்க தான் தைரியமான ஆளாச்சே, அவர வச்சு படம் எடுங்க.. பாலாவை சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை

Bala-Blue Sattai Maaran: புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன் அப்படின்னு பாலா புலம்பாத குறைதான். ஏகப்பட்ட பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக வணங்கான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் இந்த நேரம் பார்த்து கிளம்பிய சர்ச்சை பாலாவை ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடிகை மமிதா வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை கூறி பெரும் பிரச்சனையை கிளப்பி இருந்தார். அதற்கு அவர் தற்போது விளக்கம் அளித்து பாலா மீது தவறில்லை என்று கூறியிருந்தாலும் நெட்டிசன்கள் இந்த விவகாரத்தை இன்னும் விமர்சித்து தான் வருகின்றனர்.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறனும் பாலாவை சீண்டி பார்க்கும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது பாலா தன் படத்தில் நடிக்கும் அனைவரையும் இஷ்டத்துக்கு அடிப்பார் என்ற குற்றச்சாட்டு வருட கணக்காகவே இருந்து வருகிறது. அது பற்றிய சில வீடியோக்கள் கூட வெளிவந்திருக்கிறது.

Also read: பாலாவிடம் அடிவாங்கிய 6  நடிகைகள்.. அடி வாங்கி தையல் போடப்பட்ட வாரிசு நடிகை..!

அதனாலயே மமிதா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தற்போது ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு பாலா தெலுங்கு நடிகர் பாலய்யாவை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என நக்கலாக பதிவிட்டுள்ளார். ஏனென்றால் பாலய்யா முரட்டுத்தனமாக நபர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

blue sattai-tweet
blue sattai-tweet

படப்பிடிப்பில் இவரிடம் தான் மற்றவர்கள் அடி வாங்குவார்கள். இப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் இணைந்தால் சொல்லவா வேண்டும், ரத்த களறியாக மாறிவிடும். இன்னும் சொல்லப்போனால் இவர்களுடைய சண்டையை ஷூட் செய்து படமாக வெளியிட்டு விடலாம். அந்த அளவுக்கு ரணகளமாக இருக்கும்.

அதனால்தான் ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்களும் ஓவர் குசும்புய்யா உனக்கு என கிண்டல் அடித்து வருகின்றனர். இப்போதுதான் பாலா பிரச்சனை ஓய்ந்து இருக்கிறது என்று பார்த்தால் ப்ளூ சட்டை விடாமல் அதை கிளறி விட்டு வேடிக்கை பார்க்கிறார். இது என்ன பிரச்சனையை கிளப்ப போகிறதோ.

Also read: பிரச்சனைக்கு பயந்து பம்மிய நடிகை.. சப்பை கட்டு கட்டி பாலா விவகாரத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி

Trending News