புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரே வார்த்தையில் ஜெயிலர் டிரைலரை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை.. பப்ளிசிட்டி பைத்தியம் ஆகிவிட்டார் போல

Rajinikanth-Bluesattai Maaran: புது படங்களின் விமர்சனங்களை வித்தியாசமான முறையில் சொல்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களிடமும், சினிமா பிரபலங்களிடமும் வாங்கி கட்டிக் கொள்ளும் ப்ளூ சட்டை மாறன், கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவையில்லாமல் சீண்டி வருகிறார். இதுவரை இந்த அளவுக்கு ரஜினியை யாரும் விமர்சனம் செய்ததில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியதிலிருந்து இவர் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அந்த படத்தை விமர்சனம் என்ற பெயரில் வச்சு செய்யும் இவர், சமீப காலமாக ட்விட்டரிலும் பயங்கர ட்ரெண்டாகி விட்டார். இவருடைய ட்வீட்கள் அதிக கவனத்தையும் பெற்று வருகிறது.

Also Read:இது ஜெயிலரா இல்ல விக்ரம் ரீமேக்கா.. இப்படி வசமா மாட்டிக்கிட்டீங்களே நெல்சன்!

அதிலும் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த பிறகு ப்ளூ சட்டை ரஜினியை ரொம்பவும் அதிகமாக சீண்டிக்கொண்டே இருக்கிறார். கலாநிதி மாறனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி என்ன 72 வயதில் நடித்துக் கொண்டிருக்கிறார், 86 வயது வரை ஹீரோவாக நடித்த நடிகர்களும் இருக்கிறார்கள் என தேவையில்லாமல் கருத்து தெரிவித்திருந்தார்.

நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான பிறகு தன்னுடைய அடுத்த கட்ட சீண்டலை ஆரம்பித்திருக்கிறார் இவர். இந்த ட்ரெய்லரில் ரஜினிகாந்த் இனி பேச்செல்லாம் கிடையாது வீச்சு தான் என ஒரு பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். இதை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கும் நேரத்தில் ப்ளூ சட்டை பரோட்டா புகைப்படத்தை பகிர்ந்து வீச்சுனா பரோட்டா வீச்சா என்று தேவையில்லாமல் கிளப்பி விட்டிருக்கிறார்.

Also Read:ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்.. லியோவை மொத்தமாய் முடித்துவிட்ட ஜெயிலர் வீடியோ

ஒரு சினிமா விமர்சகராக அறிமுகமான இந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது தேவையில்லாமல் நடிகர்களை சீண்டி வருவது கொஞ்சம் முகம் சுளிக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. இருந்தாலும் அந்த நடிகர்களுக்கு எதிராக இருக்கும் சில ரசிகர்கள் இது போன்ற விமர்சனங்களை கொண்டாடி வருகிறார்கள். இதனால் தான் ப்ளூ சட்டை போன்ற ஆட்களும் ரிவ்யூ சொல்கிறேன், கதை சொல்கிறேன் என ஆரம்பிக்கிறார்கள்.

எதிர்மறையான விமர்சனங்களின் மூலம் ஏற்கனவே பப்ளிசிட்டியை தேடிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன், இப்போது இது போன்ற ஹீரோக்களை சீண்டுவதன் மூலம் இன்னும் அதிகமாக பேர் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இப்படி செய்வது போல் தெரிகிறது.

Also Read:ஜெயிலர் ஜெயிச்சா இதெல்லாம் தான் காரணம்.. விஜய்யை பெருமையாக பேசி சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தும் பிரபலம்

Trending News