சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஓவர் நைட்டில் திருந்திய ப்ளூ சட்டை மாறன்.. என்ன மனுஷன் திடீர்னு இப்படி மாறிட்டாரு

தனக்கென சொந்தமாக யூடியூபில் ஒரு சேனலை வைத்துக்கொண்டு அதில் பிரபல நடிகர்களின் திரைப்படங்களை விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். அப்படி இவர் விமர்சிக்கும் திரைப்படங்களில் எல்லாம் நேர்மையான கருத்துகளை கூறாமல் தன் போக்கில் ஏதோ ஒன்றை கூறுவது தான் இவருடைய வழக்கம்.

இதனால் இவரின் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருவார்கள். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இவர் தொடர்ந்து தன்னுடைய விமர்சனங்களை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வைத்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை பற்றியும் விமர்சனம் செய்திருந்தார்.

அதில் படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் அஜித்தை பற்றி பல மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவருடைய இந்த பேச்சை கேட்ட அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு எதிராக சோஷியல் மீடியாவில் பல கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் வலிமை திரைப்படம் தொடர்பாக தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் வளைத்துப் பிடித்து அடித்தார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. ஆனால் அதில் உண்மை கிடையாது என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படம் தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது வலிமை திரைப்படம் ஜீ 5 தளத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் 10 ஆயிரம் அடி கொண்ட பிரம்மாண்ட போஸ்டர் தயாராகியுள்ளது.

இதுபற்றிய போட்டோவை தான் ப்ளூ சட்டை மாறன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் திருந்திட்டியா என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் திட்டி இருந்தாலும் மற்றொருபுறம் பணப்பட்டுவாடா நடந்து இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மேலும் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் இவ்வளவு சீக்கிரத்தில் ஓடிடியில் வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இதை வரவேற்கின்றனர்.

Trending News