மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் நடிகர், விளாசிய ப்ளூ சட்டை

Blue Satta Maran: சோசியல் மீடியாவில் சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் காட்டமாக விமர்சித்து வருபவர்தான் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் இப்போது நடிகரும் டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் 15-ஆம் தேதி வெளியாகிறது. இதில் லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத், வடிவேலு  உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு இடையில் ராகவா லாரன்ஸ் சிலருக்கு வீடு தேடியே அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார்.

Also Read: சந்திரமுகி 2வில் லாரன்ஸ் வாங்கிய சம்பளம்.. அசால்டா வியாபாரம் பண்ணி கெத்து காட்டிய லைக்கா

இதனை இப்போது தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் உதவி செய்ததை வீடியோவாகவும் புகைப்படமாகவும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த விஷயத்திற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்ல மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் சமீபத்தில் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் ப்ளூ சட்டை மாறன், ‘படம் ரிலீஸ் நேரத்தில் இப்படி பரபரப்பாக்குவது சகஜம் தானே’ என்று பதில் ட்விட் போட்டு இருக்கிறார்.

Also Read: ரஜினியை அவர் இஷ்டம் போல் வாழ விடுங்க.. சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கும் ஆதரவு, பதிலடி கொடுத்த லாரன்ஸ்

இதற்கு சிலர், ‘ராகவா லாரன்ஸ் கடவுள் தேர்ந்தெடுத்து இருக்கிறாரா!‘ என கேள்வி எழுப்பியதற்கு, ‘ஆமாம் நம்புங்க’ என்றும் ப்ளூ சட்டை மாறன் நெட்டிசன்களுடன் சேர்ந்து, உருட்டும் ராகவா லாரன்ஸை வச்சு செய்கிறார். ஆனால் அவருடைய ரசிகர்கள் சிலர், ‘ராகவா லாரன்ஸின் வழி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி என புகழ்ந்து வருகின்றனர்.

இதற்கும் பதில் கொடுத்த ப்ளூ சட்டை மாறன், ‘இப்படி எல்லாம் நம்பித்தான் வீணா போறீங்க ’ என ரசிகர்களின் அறியாமையை கேலி கிண்டல் செய்துள்ளார். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது உதவி செய்வதாக சீப்பாக பப்ளிசிட்டி செய்வது சந்திரமுகி 2 படத்தின் வெற்றிக்காக தான் என்று ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தை வைத்து விளாசுகிறார்.

Also Read: சந்திரமுகி 2 வசூல் வேட்டைக்கு லைக்காவின் ராஜதந்திரம்.. பக்காவாய் காய் நகர்த்தும் லாரன்ஸ் அண்ட் கோ