செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீங்க சீரியல் பைத்தியமா? அப்ப வாரிசு உங்களுக்கு பிளாக்பஸ்டர்.. விமர்சனம் என்ற பெயரில் கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்

இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கும் விஜய்யின் வாரிசு படத்தை குறித்து சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் குவிகிறது. அந்த வகையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எப்படிப்பட்ட நடிகர்கள் படங்கள் வெளிவந்தாலும் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை காட்டுமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார்.

இந்நிலையில் வாரிசு படத்திற்கான விமர்சனத்தை தாறுமாறாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். குடும்ப கதையம்சம் கொண்ட செண்டிமெண்ட் படம் என படக்குழு ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது குடும்ப கதையா அல்லது ஹீரோவும் வில்லனும் மோதிக் கொள்ளும் மசாலா கதையா என்பது படத்தைப் பார்ப்பவர்களை விட படத்தின் இயக்குனருக்கு அதிகமாக இருந்திருக்கிறது.

Also Read: பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஒன் மேன் ஷோ.. வாரிசு அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ

குடும்ப பிரச்சினை இருக்கும் படத்தில், ரசிகர்கள் அந்தக் குடும்ப கதையுடன் ஒன்றிக்க வேண்டும். ஆனால் வாரிசு படத்தில் எந்த இடத்திலும் ரசிகர்களால் எமோஷனல் ஆக கலெக்ட் ஆக முடியவில்லை. வில்லன்களையும் படும் மொக்கையாக இயக்குனர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது வில்லனுடன் விஜய் சண்டை போட்டால் என்ன! போடாவிட்டால் என்ன! என்ற எண்ணம் பார்ப்போருக்கு தோன்றுகிறது.

அதிலும் இந்த காலத்திற்கு ஏற்றார் போல் படத்தின் வசனத்தில் கொண்டு வராமல் விட்டுவிட்டனர். பேமிலி ஆடியன்ஸை கவரும் விதத்தில் படம் இருக்கும் என்று நினைத்தால், பார்ப்போரை குழப்பம் வகையில் படத்தை எடுத்து இருக்கிறார்கள். இப்படி நாலா பக்கமும் அடி வாங்கிய வாரிசு படத்தில் விஜய் என்ட்ரி அபத்தமாக அமைந்திருக்கிறது.

Also Read: கணக்குப் பார்க்காமல் வாரி கொடுத்த தில் ராஜு.. வாரிசு பட நடிகர்களின் மொத்த சம்பள விவரம்

மேலும் வாரிசு படத்தை பார்த்த பிறகு 50 வருடத்திற்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மாட்டுக்கார வேலன் படம் எவ்வளவோ மேல் என்றும் ப்ளூ சட்டை மாறன் விலாசி இருக்கிறார். குறிப்பாக வாரிசு படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நிற்காமல் போனது.

ஆட்டுக்கு எதுக்கு தாடி, நாட்டுக்கு எதுக்கு கவர்னர் என தோன்ற வைக்கும் அளவுக்கு படத்தில் ராஷ்மிகா மந்தனா எதற்கு நடித்திருக்கிறார் இந்த கேள்வி எழுந்திருக்கிறது. அத்துடன் கிளைமாக்ஸில் வில்லன் பிரகாஷ்ராஜுக்கு விஜய் பக்கம் பக்கமாக அறிவுரை சொல்லி திருத்தி இருக்கிறார்.

Also Read: வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் விமர்சனம் கூறிய பயில்வான்

இனிமேல் பிரகாஷ்ராஜை நினைத்தாலும் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியாத அளவுக்கு நல்லவனாக மாற்றினார். இப்படி படத்தில் எந்தவித சுவாரசியமும் இல்லாமல் அடுத்தடுத்து சீன்களை ரசிகர்களை யூகிக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றனர். மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட பாடல்கள் மற்றும் டான்ஸ் நன்றாக இருக்கும்.

ஆனால் வாரிசு படத்தில் அது கூட தேரல. மொத்தத்தில் இந்த படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டஃப் செய்யப்பட்ட பெரிய மெகா சீரியல். ஆதலால் நீங்க சீரியல் பைத்தியம் என்றால் வாரிசு உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு என விமர்சனம் என்கின்ற பெயரில் ப்ளூ சட்டை மாறன் வாரிசு படத்தை கழுவி கழுவி ஊற்றி இருக்கிறார்.

Trending News