வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உச்ச கட்ட டென்ஷனில் வாரிசு, துணிவு.. பழசை கிளறி மூட்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்

சோசியல் மீடியாவில் தேவையில்லாமல் பேசி சகுனி வேலை பார்த்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய், அஜித் ரசிகர்களை வம்பிழுப்பது தான் ஒரே பொழுதுபோக்கு. அந்த வகையில் இவர் தற்போது முடிந்து போன பழைய விஷயம் ஒன்றை கிளறி ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார்.

அதாவது இந்த வருடம் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட், அஜித்தின் நடிப்பில் வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பீஸ்ட் படத்தை விட வலிமை திரைப்படம் தான் அதிக லாபம் பெற்றது என்ற ஒரு தகவலை தற்போது ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

Also read: துணிவை துணிந்து அடிக்க காத்திருக்கும் வாரிசு.. ஆடியோ பங்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடிகளா?

இந்த விஷயத்தை திருச்சி திரையரங்கு உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் கூறியிருக்கிறார். அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் இதன் மூலம் விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே ஒரு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த பதிவால் கடுப்பான இரு தரப்பு ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி வருகின்றனர்.

ஏனென்றால் தற்போது வாரிசு, துணிவு திரைப்படங்களின் ரிலீஸ் பற்றிய விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ஒட்டுமொத்த திரையுலகமும் உச்சகட்ட டென்ஷனோடு இந்த படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களுக்குமான தியேட்டர் நிலவரம் பற்றிய செய்தியும் இன்னும் வெளியாகவில்லை.

Also read: சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

ஆனால் அதற்கு முன்னதாகவே துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால் வாரிசு திரைப்படம் வசூலில் அடி வாங்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அஜித் படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதுதான் விஜய் ரசிகர்களின் ஆத்திரத்திற்கு காரணமாக இருக்கிறது. தற்போது அவர்கள் நீ என்ன அந்த படங்களின் தயாரிப்பாளரா, உன்னுடைய ஆன்ட்டி இந்தியன் படம் எந்த லட்சணத்தில் இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும் என அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ப்ளூ சட்டை மாறன் அவருடைய நாரதர் வேலையை நிறுத்தப் போவதில்லை.

Also read: ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Trending News