வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யோகா செய்தால் கோபம் குறையும்.. ரஜினி, சிவகுமாரை வைத்து நக்கலடித்த ப்ளூ சட்டை

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து சர்ச்சையை கிளப்பி விடுவார். சினிமாவில் தான் இவ்வாறு செய்து வருகிறார் என்று பார்த்த நிலையில் இப்போது அரசியலிலும் அவரது சேட்டை ஆரம்பித்துவிட்டது. இப்போது ரஜினி, சிவகுமாரை நக்கல் அடித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் யோகாவை கட்டாயம் ஆக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ரெண்டு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் எவ்வளவு கொழுப்பு சேருமோ, அந்த அளவிற்கு கொழுப்பு கோவப்பட்டால் உடம்பில் சேரும்.

Also Read : 2 நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. அஜித்தை கிண்டல் அடித்து ப்ளூ சட்டை போட்ட பதிவு

ஆகையால் யோகா செய்வதன் மூலம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தலாம் என தமிழிசை பேசி இருந்தார். இதுதான் இப்போது ப்ளூ சட்டைக்கு கிடைத்த கன்டென்ட் ஆக இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் ரஜினிக்கு பல கெட்ட பழக்கங்கள் இருந்த நிலையில் இப்போது அதிலிருந்து விடுபட்டு விட்டார்.

மேலும் ரஜினி இப்போது யோகா, தியானம் போன்றவற்றை தினமும் செய்து வருகிறார். அதேபோல் தான் நடிகர் சிவகுமார் தற்போதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள யோகா செய்து வருகிறார். பல மேடைகளில் அவர் பேசும் போதும் யோகா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்திருக்கிறார்.

Also Read : பாபா படத்துடன் திருந்திய ரஜினி.. திருந்தாமல் நாடகமாடும் விஜய்

ஆகையால் பல வருடமாக யோகா செய்யும் ரஜினி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தின் போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஏய் வேற எதுவும் கேள்வி இருக்கா என கத்தினார். அதேபோல் சிவகுமாரும் தனது அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க வந்த நபரின் போனை கீழே தள்ளி விட்டார்.

இவ்வாறு தினமும் யோகா செய்து வரும் ரஜினி மற்றும் சிவக்குமார் பொது வழியில் இவ்வாறு கோபமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்ற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் வைத்துள்ளார். சில சமயங்களில் எல்லை மீறி கோபம் வருவது சகஜம் தான், யோகா அந்த கோபத்தை கட்டுப்படுத்து உதவும் என்பதை தான் தமிழிசை கூறியிருக்கிறார். ஆனால் அதையும் இப்படி வச்சி செய்துள்ளார் ப்ளூ சட்டை.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

Trending News