வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்தை எப்படி கபாலியோட ஒப்பிட முடியும்.. மீண்டும் ரஜினியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எப்போதுமே அஜித்தை வம்பிழுக்கும் படியாக தான் பதிவு போட்டு வருவார். ஆனால் திடீரென அஜித்துக்கு ஆதரவாக அவர் போட்டுள்ள பதிவுதான் அஜித் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ரஜினியை சீண்டி கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கு தீனி போடும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்தது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பலரும் ரஜினியை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆகையால் ப்ளூ சட்டை மாறனை சொல்லவா வேண்டும்.

Also Read : ரஜினி வீட்டில் ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த தர்ம அடி.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விமர்சகர்

ரஜினியை கேலி, கிண்டல் செய்யும் விதமாக தொடர்ந்து பதிவு போட்டு வருகிறார். ஒருபுறம் இதற்கு எதிராக அஜித் அமிதாபச்சன் காலில் விழுந்த புகைப்படத்தை போட்டு இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் அஜித்துக்கு ஆதரவாக பொங்கி எழுந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது கலைத்துறையின் மூத்த நடிகரான அமிதாபச்சன் அஜித்தை விட வயதில் மூத்தவர். அதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் உல்லாசம் படத்தை தயாரித்தவர் இவர்தான். ஆகையால் மரியாதை நிமித்தமாக அவரது காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். இதை போய் கபாலியோடு அதாவது ரஜினியோடு எப்படி ஒப்பிட முடியும்.

Also Read : விடுமுறை நாட்களிலும் போனியாகாத ஜெயிலர் வசூல்.. 11வது நாளில் செய்த மொத்த கலெக்ஷன், கலங்கிய கலாநிதி

அஜித்தின் படங்கள் தனக்கு பிடிக்காமல் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்தில் அஜித்துக்கு இணையான ஒரு முன்னணி நடிகர் இங்கு இருக்க முடியாது. மேலும் கருப்பு பணத்தை பதுகுறவங்களுக்கு இங்கே இவ்வளவு கொழுப்பு இருக்கும்போது நேர்மையாக வரி கட்டுற அஜித்துக்கு எவ்வளவு இருக்கும் என்று ப்ளூ சட்டை பதிவு போட்டு இருக்கிறார்.

இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தான் கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால் ரஜினி தன்னைவிட வயதில் மிகவும் குறைவான ஒருவரின் காலில் விழுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதனால் ஜெயிலர் வசூலும் இப்போது பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ரஜினியை சீண்டி ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : பார்க்க தான் காமெடி பீஸ், நிஜத்தில் கோடீஸ்வரன்.. கலாநிதியை விட காஸ்ட்லி காரை வைத்திருக்கும் ஜெயிலர் பிரபலம்

Trending News