சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பரோட்டாவிற்கு மாவு பிசையும் அஜித்.. வாய் கொழுப்பாக பேசிய ப்ளூ சட்டை மாறனுக்கு நடந்த தரமான சம்பவம்

சினிமா விமர்சனம் சொல்லியே பெயர் பெற்ற, பல தயாரிப்பாளர்கள் சினிமா நிறுவனங்கள் கண்டு பயப்படும் ஒரு சினிமா விமர்சகர் என்றால் அது ப்ளூ சட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். எப்பேர்பட்ட சினிமாவாக இருந்தாலும் சரி, ஹாலிவுட் ,பாலிவுட் என்று எதையும் பாராமல் அத்தனையிலும் இவர் தன்னை வித்தகர் என்று நினைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு இவர் கொடுக்கும் ரிவ்யூ , அந்த படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் கெடுத்துவிடும். ஆனால், காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உண்மையைச் சொல்லி விடுகிறார் இவர் என்று இவருடைய ரிவியூக்களுக்கு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

வலிமை படம் ரிலீசான பிறகு படத்திற்காக வெயிட் செய்தவர்களை விட இவரின் ரிவ்யூக்காக வெயிட் செய்தவர்கள்தான் அதிகம் . வலிமை படம் வேறு ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இல்லாமல் போய் விட்டது . அதனால் இதை ப்ளூ சட்டை மாறன் எந்த அளவிற்கு கிழித்து தொங்க விடப் போகிறார் என்ற எண்ணம் மட்டுமே ரசிகர்களுக்கு இருந்தது.இதை நிரூபிக்கும் படி அவரும் வலிமை படத்தினை
வழக்கம் போல மிகவும் மோசமாக தன்னுடைய பாணியில் நக்கலும் நையாண்டியும் கலந்து ரிவியூவில் கூறியிருக்கிறார்.

மேலும் ,அவர் அதோடு விடாமல், தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தில் அஜித் டான்ஸ் ஆடிய வேற மாதிரி பாடலின் காட்சிகளை டிவீட் செய்து அதில் பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? என்ற கேள்வியோடு போஸ்ட் போட்டு இருந்தார். இதனை பார்த்த பல அஜித் ரசிகர்களும் அவரை திட்டி தீர்க்க கமெண்டக்களில் குவிந்தனர்.

ப்ளூ சட்டை மாறனை வார்த்தைகளால் வசை பாடினர். அந்த சமயத்தில் பிரபல தயாரிப்பாளரான தனஜெயன் அந்த போஸ்டை குறித்து தனது கண்டனத்தை பகிரங்கமாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் அப்படி அதில் கூறும் போது, நான் இதை பார்த்து உண்மையில் மனமுடைந்து போனேன், மேலும் கடும் கோபத்தில் இருக்கின்றேன்.

இந்த கமெண்ட் வலிமை படத்தை ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், இது ஒருவரை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் போக்கு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறான காரியம். அஜித்தை குறி வைத்து கிண்டல் செய்து இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு கூறி இருக்கிறார். கொஞ்சமாவது மனித தன்மை மாறாமல், தமிழ் டாக்கீஸ் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.அதற்கு கீழே அஜித் ரசிகர்கள் தனஜெயனுக்கு ஆதரவாக கமெண்டகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இது முதல் முறை அல்ல பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்று பாராமல் படத்தின் பட்ஜெட் என எதைப்பற்றியும் சிந்திக்காமல் படம் ப்ளூ சட்டை மாறனுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரக்குறைவாக ரிவ்யூ செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுகிறார். இந்த பதிவுகள் அந்தப் படத்தின் வசூலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தொடர்ந்து தயாரிப்பாளர்கள் இவரை சாடுவதுமுண்டு.

ajith
ajith

இதற்கு முன்னால் அஜித்தின் வீரம், விஸ்வாசம், விவேகம் என அனைத்து படங்களையும் ப்ளூ சட்டை மாறன் வறுத்து எடுத்திருக்கிறார். அதேபோல,வலிமை படத்தையும் தற்போது செய்திருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Trending News