சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நம்பர் ஒன் நான் தான்.. சொன்ன போதாது! பார்த்திபனுக்குப் பின் விஜய் பக்கம் திரும்பிய ப்ளூ சட்டை மாறன்

இந்த வருட பொங்கலுக்கு தல தளபதி வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகி சுமார் 44 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான வாரிசு படத்தின் எதிர்பார்த்ததை அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதிலும் துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களையும் 1.1 மில்லியன் லைக்குகளையும் அள்ளியது. ஆனால் வாரிசு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை யும் 1.8 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றது.

Also Read: ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்.. விடாமல் துரத்தும் சண்டை

இதனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே விஜய் தான் நம்பர் ஒன். அவருக்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என பீத்திக் கொண்டிருந்த நிலையில், இப்போது ட்ரெய்லரிலேயே வாரிசு மண்ணை கவ்வி இருக்கிறது என சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர்.

அதிலும் ப்ளூ சட்டை மாறன் எந்த நடிகரையும் விட மாட்டார். அதிலும் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை வைத்து சோசியல் மீடியாவில் அவர்களுக்கு இடையே பனிப்போரே நிலவியது. இப்போது பார்த்திபனை விட்டுவிட்டு விஜய் பக்கம் திருப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Also Read: ஆன்ட்டி இந்தியன் வாங்காத விருதுகளா? வயிற்றெரிச்சலில் விஜய் சேதுபதியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

இவ்வளவு பெரிய ஆடியோ லான்ச் வச்சி அசத்தினார், ரசிகர்களுக்கு இரண்டு முறை பிரியாணி கொடுத்தார். ஆனால் ட்ரெய்லரை பார்க்க ஆளே இல்லை. இவ்வளவு கம்மியான வியூஸ் போகிறது. அப்ப விஜய்யோட பவர் போயிடுச்சா! என ப்ளூ சட்டை மாறன் கேட்டுள்ளார்.

ஆனால் துணிவு படத்திற்காக அஜித் ஆடியோ லான்ச் வைக்கல புரமோஷனுக்கு வரல, அத்துடன் ரசிகர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பையும் கிளப்பாமல், டிரைலரில் பட்டைய கிளப்பிட்டு இருக்கார். நம்பர் ஒன் நான் தான் அப்படின்னு விஜய் சொன்னா போதாது! என வாரிசு படத்தின் ட்ரெய்லரை வைத்து ப்ளூ சட்டை மாறன் விலாசுகிறார்.

Also Read: விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

Trending News