சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஓடிடியில் கூட இவங்க படம் ஓடல.. டாப் ஹீரோக்களை லிஸ்ட் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். தன்னைத்தானே திரைப்பட விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு முன்னணியில் இருக்கும் ஹீரோக்களை பற்றி ஏதாவது குறை கூறுவது தான் இவருடைய வேலையே. இதனால் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

இருந்தாலும் அவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வம்பு இழுப்பதை தான் ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் டாப் ஹீரோக்களை பற்றி கலாய்த்து டுவீட் செய்துள்ளார். அதில் அவர் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் ஓடிடி யில் வெளிவந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதை குறிப்பிட்டு கூறியிருக்கும் ப்ளூ சட்டை மாறன் சூர்யா இனிமேல் ஓடிடி ஹீரோ தான் என்பது போன்று கிண்டலாக சொல்லி இருக்கிறார்.

மேலும் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதைத்தொடர்ந்து ஓடிடி யில் வெளியான டானாக்காரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் அவருக்கும் ஓடிடி தளம் தான் சரியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பில் ஓடிடி யில் வெளியான ஜகமே தந்திரம், அத்ரங்கி ரே, மாறன் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேபோன்று விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

மேலும் விக்ரமின் மகான் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது என்று அவர் லிஸ்ட் போட்டு கலாய்த்துள்ளார். இதைப் பார்த்த அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் தற்போது ப்ளூ சட்டை மாறன் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

தற்போது அவருடைய இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் கூறியது போன்று அந்தப் படங்கள் அனைத்தும் அவ்வளவு மோசமாக இல்லை என்று ரசிகர்கள் முன்னணி ஹீரோக்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

Trending News