திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பார்த்திபனை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. 84 நாமினேஷனில் 32 விருது வாங்கிய ஒரே தமிழ் படம் இதுதான்

இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் தன்னுடைய கடின உழைப்பை போட்டு எடுத்த படம் தான் இரவின் நிழல். இந்தப் படத்தை புதிய முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் எடுத்திருந்தார். மேலும் இந்த படம் முதலில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் படம் என்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே சிங்கிள் ஷாட்டில் ஒரு படம் வெளியாகி உள்ளதாக பார்த்திபனை கிண்டல் அடித்து பேசி இருந்தார். மேலும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் இரவின் நிழல் படம் திரையிடப்பட்டிருந்தது.

Also Read : பார்த்திபன் சொன்னது அத்தனையும் பொய்.. விவாகரத்துக்கான காரணத்தை உடைத்த சீதா

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பார்த்திபன் இரவின் நிழல் படம் லாபத்தை பெற்றதா, இல்லையா என்பதை பற்றி எனக்கு எப்போதுமே கவலை இல்லை. இப்படம் மக்களிற்கு போய் சென்றது மட்டுமின்றி 114 விருதுகளை வாங்கி உள்ளதாகவும், சர்வதேச விழாவில் திரையிட்டது பெருமையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதை அறிந்த ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் 115 விருது வாங்கி இருக்கியா, அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஏதாவது விருது கொடுத்துள்ளதா, எல்லாம் உப்புமா கம்பெனி என கிண்டலடித்து பேசி இருந்தார். இதற்கு ஒரு புறம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

Also Read : 2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

இப்போது மீண்டும் பார்த்திபனை மாறன் சீண்டி உள்ளார். அதாவது 84 பரிந்துரைகளுடன் 32 விருதுகளை வென்ற ஒரே தமிழ்த் திரைப்படம் செழியன் இயக்கிய டூலெட் தான். இதுவரை எந்த தமிழ் படமும் 100 விழா அங்கீகாரம் பெறவில்லை. இந்த படத்திற்கு மட்டுமே அந்த பெருமை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

பார்த்திபன் 100க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளேன் என்று சொல்லியதற்காகவே ப்ளூ சட்டை மாறன் தேடிப்பிடித்து அதிக விருது வாங்கிய படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்படி பார்த்திபன் மீது ப்ளூ சட்டை மாறனுக்கு என தான் கோபமோ தெரியவில்லை.

Also Read : பார்த்திபன், பாண்டியராஜன் என வளர்த்து விட்ட பாக்யராஜ்.. ஒருவருக்கு மட்டும் நடந்த துரதிர்ஷ்டம்

Trending News