சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் இந்த நான் தான் கிங்கு என்ற படம் வெளியானது. ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் இப்படம் குறித்து விமர்சனத்தை தனது யூடியூப் சேனலில் கொடுத்திருக்கிறார்.
அதாவது திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அலையும் சந்தானம் வீடு கட்டினால் தான் பெண் தருவார்கள் என்றவுடன் 20 லட்சம் கடன் வாங்கி வீட்டை கட்டுகிறார். அப்போது ஜமீன்தார் குடும்பத்து வரன் வர ஆசையாக சந்தானம் திருமணம் செய்து கொள்கிறார்.
அதன் பிறகு தான் தெரிகிறது திவாலான ஜமீன் குடும்பம் அது என்று. மனைவியை மட்டுமல்லாமல் ஜமீன்தார் மற்றும் அவரது மகனையும் பார்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு கலகலப்பாக சென்று கொண்டிருந்த கதையில் தீவிரவாதிகள் நுழைகிறார்கள்.
சந்தானத்தின் இங்க நான் தான் கிங் படத்திற்கு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
அவர்களுக்கும் சந்தானத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் இங்கு நான் தான் கிங்கு படத்தின் கதையாக இருக்கிறது. இதுதான் கதை என்பதை பிடிக்கவே இருபது நிமிசத்திற்கு மேலாகிறது என ப்ளூ சட்டை கூறுகிறார். மேலும் பெண் தேடும் படலத்தில் ஆரம்பித்த தீவிரவாதிகள் கதையை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
படம் பார்க்க நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் இயக்குனர் சுதப்பிவிட்டார். சந்தானத்தின் முந்தைய படங்களான டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற அளவுக்கு சூப்பராக இங்க நான் தான் கிங்கு படம் இல்லை.
ஆனாலும் அதற்கு முன்பு சந்தானத்தின் கிக் மற்றும் 80ஸ் பில்டப் போன்ற படங்களைப் போல் காட்டு மொக்கையாகவும் இல்லை. சில படங்களில் நம்மை ஊமைக்குத்தாக குத்துவது போல் இந்த படத்திலும் இரண்டு ஊமைக்குத்து குத்தி உள்ளார்கள் என்று வருத்தெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.