செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் பிளாக்பஸ்டர் உறுதி தான் 

Blue Sattai Maran Controversy: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அந்த படத்திற்கு நெகட்டிவிட்டி பரப்பி வந்தவர் தான் திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.  இந்த படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ என்ற பெயரில் ரஜினியை  தவிர மற்ற எல்லோரும் தான் நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்றார்.

இப்பொழுது ஜெயிலர் படம் உலகம் முழுவதும் தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது இதை ஜீரணிக்க முடியாத ப்ளூ சட்டை ஜெயிலர் படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் எல்லாம் பொய் என்கிறார். இந்த படம் ரஜினிக்கு அண்ணாத்த, தர்பார்  வரிசையில் சேர்ந்தது என்றெல்லாம் வசை பாடினார்.

Also Read: 7வது நாள் ஜெயிலரின் வசூல்.. விக்ரம் வசூலை முறியடித்து சாதனை, அள்ள அள்ள குறையாத கலாநிதியின் கஜானா

பல முன்னணி துரை விமர்சகர்கள் ஒவ்வொரு நாளும் ஜெயிலர் படத்தின் கலெக்சன் ரிப்போர்ட்டை பதிவிடும் போது உடனடியாக உள்ளே புகுந்து ப்ளூ சட்டை மாறன் வடை மெஷின் வீடியோவை அவர்களது ட்விட்டருக்கு கீழ் கமெண்ட் போட்டு கலகம் செய்து கொண்டிருக்கிறார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இருக்கு ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட இன்னமும் தைரியம் வரவில்லை.

அதற்கு முன்பே நீங்கள் எல்லாம் ஏன் இப்படி வடை சுடுகிறீர்கள் என்று காட்டமாக பேசி வருகிறார். அதுவும் ஏழு நாட்களில் 450 கோடியை ஜெயிலர் வசூலை குவித்து இருக்கிறது என்ற விஷயத்தை தெரிந்ததும் ப்ளூ சட்டை மாறனால் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

Also Read: ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம்! அப்படிதான் இவரும் ஜெயிலர் படத்தின் வசூலை தாங்கிக் கொள்ள முடியாமல் இஷ்டத்திற்கு உளறிக் கொண்டிருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் பேசுவதில்  இருந்து இவர்  ரஜினியை வெறுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இவருக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அவ்வப்போது தங்களது சரவெடியான பதிலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியும் அடங்காத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ஜெயிலர் படத்தைக் குறித்து எதிர்வலைகளை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். என்னா தான் தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஜெயிலர் பிளாக்பஸ்டர் ஹிட்  கொடுத்துக் கொண்டிருப்பது உறுதி தான் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் காலரை தூக்கி கெத்து காட்டுகின்றனர்.

Also Read: ரஜினிக்கு குடைச்சல் கொடுத்த நடிகர்.. 30 வருடமாய் காத்திருந்து கெஞ்சி கேட்டு ஜெயிலரில் பெற்ற வாய்ப்பு

Trending News