Blue Star Twitter Review : எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ப்ளூ ஸ்டார். இப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. ப்ளூ ஸ்டார் படம் காதல், ஜாதி, கிரிக்கெட் ஆகியவற்றை சுற்றியே எடுக்கப்பட்டிருக்கிறது.
ப்ளூ ஸ்டாரில் உள்ள இரண்டு நட்சத்திரங்களும் மகா வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அரக்கோணத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் கிரிக்கெட் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அசோக் செல்வன் சிறந்த கதை தேர்வின் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையை தொடர்ந்து காட்டி வருகிறார்.
மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு சாந்தனுவுக்கும் இந்த படம் பெயரை வாங்கி கொடுக்க உள்ளது. மேலும் மற்றோரு ரசிகர் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை வெளிப்படையாக காட்டி உள்ளது. அடக்குமுறைகளால் நடக்கும் சுலபமாக காட்டி இருக்கிறது. இரண்டாம் பாதிக்காக காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
Also Read : எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 2023 ஜெயித்த 3 ஹீரோஸ்! பெரிய கையை வளைத்து போட்ட அசோக் செல்வன்
கிரிக்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியலை பற்றி சுவாரசியமான கதை பலத்தை கொண்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து ஒரு நல்ல இடைவெளி தொகுதியுடன் படிப்படியாக ப்ளூ ஸ்டார் படம் நகர்ந்துள்ளது. அசோக் செல்வனின் கதாபாத்திரம் ஈர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாந்தனு மற்றும் அவரது அம்மா கதாபாத்திரமும் கவனம் பெற்று இருக்கிறது. சாந்தனு மற்றும் அசோக் செல்வன் ஆகியோரின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக ப்ளூ ஸ்டார் அமைந்துள்ளது. கீர்த்தி பாண்டியன் தனக்கு கொடுத்த செய்திருக்கிறார்.
Also Read : சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்