ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தலீவரையே என்கவுண்டர்ல போட்ருக்கலாம்!. ப்ளூ சட்டை மாறனின் வேட்டையன் பட விமர்சனம்

Vettaiyan: வாரா வாராம் படம் ரிலீஸ் ஆனதும் அந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் என்ன விமர்சனம் கொடுக்கிறார் என்பதை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் காத்திருக்கும். ரசிகர்கள் என்பதை தாண்டி செலிபிரிட்டிகள் கூட ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்ப்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.

இவர் ஒரு படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதிலும் மற்ற ஹீரோக்களின் படங்களை விட ரஜினியின் படம் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும். அப்படித்தான் வேட்டையன் பட விமர்சனத்திலும் சம்பவம் செய்து வைத்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் வேட்டையன் பட விமர்சனம்

படத்தின் கதையை பொறுத்த வரைக்கும் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ரஜினி நினைக்கிறார். அப்படி பார்த்தா ரஜினியே தப்பு செய்யும்போது வேற ஒரு அதிகாரியை வைத்து ரஜினியை என்கவுண்டரில் போட்டு இருக்கணும்.

அதை விட்டுட்டு தப்பு செய்றது எவ்வளவு தப்பு தெரியுமா என படம் முழுக்க பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். போதாத குறைக்கு அமிதாப்பச்சனையே உட்கார வச்சு பாடம் எடுத்துக்கிட்டு இருக்காரு, அமிதாபச்சனும் வாங்குன காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம அவர் பேசுறத ரசிச்சு கேட்டுகிட்டு இருக்கிறாரு.

நீட் கோச்சிங் சென்டர் வைத்து மக்களை ஏமாற்றுகிற அயோக்கியன் என வில்லனை காட்டுகிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தவங்கள தானே நியாயமா பார்த்தா அயோக்கியன்னு சொல்லி படம் எடுத்து இருக்கணும்.

தலைவரே எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவே சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சி காமெடியாக இருக்கிறது. அனிருத்தின் இசை சிறப்பாக இருக்கிறது.

அமிதாப்பச்சன் தன்னுடைய கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல பகத் பாசிலும் இந்த கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் இந்த கேரக்டரை பண்ண வேண்டுமா என அவர் யோசித்து இருக்கலாம் என்று மாறன் விமர்சித்து இருக்கிறார்.

மொத்தத்தில் வேட்டையன் படம் ஒரு ஆயிரம் படத்தில் அடித்து துவைத்த கதையை மீண்டும் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தன்னுடைய விமர்சனத்தை சொல்லி இருக்கிறார். ஏற்கனவே வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. போதாத குறைக்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியானதும் தற்போது பெரிய அளவில் இந்த வீடியோ வருகிறது.

Trending News