சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மகான் படத்தில் விக்ரமை தூக்கி சாப்பிட்ட கதாபாத்திரம்.. அதிர்ஷ்டவசமாக கிடைத்த வாய்ப்பு

சீயான் விக்ரமிற்கு வெகுக்காலங்கள் கழித்து, ஒரு நல்ல படம் வரும். சீயானின் நடிப்பு பசிக்கு தீனி போடும் ஒரு படம் வர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் போது வந்த படம் தான் மகான். வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, மாறுபட்ட கோணத்தில் சிந்தனை என அத்தனை அம்சங்களும் இருந்த இந்த படத்தில் திரைக்கதையில் கோட்டை விட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜினால் மகான் படம் சற்று சறுக்கி விட்டது.

அடுத்தது என்ன என்ன என்று மிரள வைக்கும் கதையை அடுத்த சீன் இதான்பா என்று சொல்லிவிடும் அளவிற்கு திரைக்கதையை சுவாரஸ்யமாக இல்லாமல் உப்புமா பாணியில் சப்பபென்று முடித்து விட்டார் இயக்குனர். ஆனால் விக்ரம் நடிப்பில் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்த அவர் தவறவில்லை. அதே சமயம் துருவ்வின் ஓவர் ஆக்டிங் படத்தை டிராக்கில் இருந்து இறக்கி வேறு ஒரு பாதையில் கொண்டு சென்று விட்டது.

இவ்வளவு குறைகள் சொன்னாலும், கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால் எங்கிருந்துதான் அப்படி ஒரு பெர்ஃபாமன்ஸ் வருகிறதோ தெரியவில்லை படத்தின் மொத்த வெயிட்டையும் தன் தோள்களில் தாங்கி நடித்து இருக்கிறார் பாபி சிம்ஹா. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இல்லாத மாஸ் விஜய்சேதுபதிக்கு கிடைத்தது போல இதில் யார் ஹீரோ என்றே தெரியாமல், விக்ரம் மற்றும் துருவ் ஒரு டிராக்கில் செல்லும் போது இந்த பக்கம் பாபி சிம்ஹா தனியாக நடிப்பில் கப்பல் ஒட்டி செல்கிறார்.

அப்படிப்பட்ட கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. ஜிகர்தண்டா படத்தில் அவர் ஏற்று நடித்த மாஸ் வில்லன் கதாப்பாத்திரம் எப்படி பேசப்பட்ட ஒன்றாக இருந்ததோ அது போல இதுவும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் முதலில் நடிப்பதற்கு பாபி சிம்ஹா முதல் தேர்வு அல்ல.

கன்னடத்தில் கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களில் நடித்து டானுக்கு எல்லாம் டானாக வலம் வரகூடியவர் தான் சிவராஜ்குமார். மறந்த புனித் ராஜ்குமாரின் சகோதரர் ஆன இவர் தான் மகான் படத்தில் பாபி சிம்ஹா கதாப்பாத்திரத்திற்கு முதல் தேர்வு. அவரிடம் கார்த்திக் சுப்புராஜ் கதையை கூற சிவராஜ்குமாருக்கும் பிடித்து போக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால், சிலக்காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டது. அவர் நடித்து இருந்தால் இன்னும் மாஸ் ஆக இருந்து இருக்கும் என்றும் கன்னடத்தில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாபி சிம்ஹா அதற்கு சற்றும் குறை சொல்ல முடியாத அளவில் தான் நடித்து இருந்தார். இந்த படம் கண்டிப்பாக அவரது வாய்ப்புகளை பெரிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News