ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த ரவுண்ட் வேற மாதிரி.. மகான் படத்திற்குப் பின் அசால்டாக கால்ஷீட்டை பறக்கவிடும் நடிகர்!

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹீரோ வில்லனாக தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு, மீண்டும் அவரது இயக்கத்திலேயே சமீபத்தில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் மிரள வைத்திருக்கிறார்.

விக்ரம் அவர் மகனுடன் இணைந்து நடித்த மகான் திரைப்படத்தில் மாசான ரோலில் இவர்களது இருவரின் நடிப்பையும் மிஞ்சும் அளவிற்கு பாபி சிம்ஹா திறமையாக நடித்து, தன்னுடைய மார்க்கெட் டல் அடிக்கும் நேரத்தில் அசால்டாக சரியான சமயத்தில் ஹிட் கொடுத்து, மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தி இருக்கிறார்.

ஏனென்றால் மகான் படத்தில் சத்தியவான் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்து அனைவரது பாராட்டையும்  பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் மூலம் பாபி சிம்ஹாவிற்கு பெரிய பெரிய இயக்குனர்களிடம் இருந்து படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். எல்லாருக்கும் கால்ஷீட்டை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த ரவுண்டில் “மகான் சத்தியவான்” போன்ற கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம்.

அந்த அளவிற்கு மகான் படத்தில் சத்தியவான் கேரக்டரில் மனுஷன் அசத்தலாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஜிகர்தண்டா, சாமி2 போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினாலும் மகான் படத்திற்குப் பிறகு பாபிசிம்ஹாவின் ரேஞ்ச் வேற லெவலுக்கு சென்றிருக்கிறது.

Trending News