ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அசால்ட் சேது கேரக்டருக்கு பாபி சிம்ஹா முதல் சாய்ஸ் இல்லையாம்.. தேசிய விருதை விட்டுக் கொடுத்த நடிகர்

ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

ஆனாலும் இவர் நடித்த அசால்ட் சேது என்ற கதாபாத்திரம் மட்டும் இன்று வரை இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டா பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா.

ஆக்ஷன் காமெடி திரைப்படமாக வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் பாபி சிம்ஹா அசால்ட் சேது என்னும் கேரக்டரில் நடித்து கலக்கி இருப்பார். ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட அந்த கேரக்டரில் நடித்ததற்காக பாபி சிம்ஹா சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான தேசிய விருதை பெற்றார்.

அது மட்டுமல்லாமல் விஜய் அவார்ட்ஸ், தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றார். மேலும் இந்தப் படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இவ்வளவு புகழை தேடிக்கொடுத்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான்.

அவரை மனதில் வைத்து தான் கார்த்திக் சுப்புராஜ் இந்த கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதியால் அந்த கேரக்டரை செய்ய முடியாமல் போனது. ஆனாலும் இந்த படத்தில் அவர் சிறு வயது அசால்ட் சேதுவாக கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு பாபி சிம்ஹாவுக்கு சென்றது. இருந்தாலும் கார்த்திக் சுப்பராஜுக்கு அவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.

அதனால் கடைசிவரை அந்த கேரக்டருக்கு பாபி சிம்ஹா வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாராம். பிறகு எப்படியோ பாபி சிம்ஹா அந்த கேரக்டரில் மிகவும் தத்ரூபமாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். அதன் பிறகு அவர் கார்த்திக் சுப்புராஜின் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Trending News