லப்பர் பந்து படத்துக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் மோஸ்ட் வான்டட் நடிகர்களாக மாறிவிட்டனர். இவர்கள் வீட்டு வாசலில் ஏகப்பட்ட புது பட இயக்குனர்கள் கியூவில் நிற்கிறார்கள். அதுமட்டுமின்ற பெரிய தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு தூது விட்டு வருகின்றனர்.
அடுத்ததாக தினேஷ் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தினேஷ், லைம் லைட்டில் இருக்கும்போதே இந்த படத்தை இயக்கி வெளியிட வேண்டும் என ரஞ்சித் அவசரப்பட்டு வருகிறார். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து இந்த படத்திற்கான சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது.
பா ரஞ்சித் அழைப்பை தட்ட முடியாத செல்ல பிள்ளைகள்
இந்த படத்தில் பா ரஞ்சித்தின் செல்ல பிள்ளைகள் இரண்டு பேர் நடிக்கிறார்கள். தினேஷுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். அதுபோக இந்த படத்தில் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இருவருமே ரஞ்சித்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக வலம் வருகிறார்கள்.
பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியவர். இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்துக்கும் நூல் விட்டு வருகிறார். இதன் காரணமாக ஆர்யாவுடன் அவருக்கு நெருக்கம் இருக்கிறது. இதை போல் தான் அசோக் செல்வனுடமும் நல்ல பழக்கம் இருந்து வருகிறது.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் ப்ளூ ஸ்டார் இந்த படத்தை தயாரித்தவர் பா ரஞ்சித் தான். படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்று அசோக் செல்வனுக்கு நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்தது. இதனால் அசோக் செல்வனால் பா ரஞ்சித் அழைப்பை தட்ட முடியவில்லை. சமீபத்தில் அசோக் செல்வன் தனுஷின் இட்லி கடை படத்திலிருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்டகத்தி முதல் லப்பர் பந்து வரை தினேஷின் வெற்றி படங்கள்
- தினேஷ், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து சிக்ஸர் அடித்ததா.?
- என்னடா பெரிய லப்பர் பந்து