செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அயோத்தி பக்கம் அத்தனை கோடிகளை வளைத்த அமிதாப்.. ரஜினி முதல் இப்பவே வளைக்கப்படும் விஐபிகள்

Bollywood Actor Amitabh bought ten thousand sq. feet land near ayodhya temple: இந்திய நாடே கோலாகலமாக கொண்டாடிய  உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி அவர்கள் விரதம் இருந்து ராம் லல்லாவை பிரதிஷ்டை செய்து நாடு சுபிக்ஷம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

சுமார் 1100 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் தொழில் அதிபர்கள் என பலருக்கும் பிரத்தியேக அழைப்பு விடுக்கப்பட்டது. பாலிவுட்டை சேர்ந்த நட்சத்திர தம்பதிகள் அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன், அவரது மகன் அபிஷேக் போன்றோர் குடும்பத்துடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கோயிலில் இருந்து வெளிவந்த பிரதமர் மோடி அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேசி  மகிழ்ந்து விடை பெற்று சென்றார்.  அமிதாப் அவர்கள் பாலிவுட்டில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் விளம்பர படங்களில் அதிகமாக தலை காட்டும் அமிதாபச்சன் அவர்கள் பல நகரங்களிலும்  வீடு மற்றும் நிலங்களில் முதலீடு செய்து உள்ளார்.

Also read: ஜெயிலரை காப்பாற்றிய அமிதாப்.. நன்றி பெருக்கில் அமிதாப்புடன் இணையும் ரஜினி.

இதன் தொடர்ச்சியாக தற்போது அமைந்திருக்கும் அயோத்தியில் ராமர் கோயில்  அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை 14.5 கோடிக்கு வாங்கி போட்டு உள்ளாராம். இவரின் இந்த ஆரோக்கியமான முதலீடு பாலிவுட் சினிமாவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து உள்ளது.

இந்த நிலத்தை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுடன் கூடிய பிரம்மாண்ட வீடுகளை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளாராம். 2028 இல் இந்த பணிகள் நிறைவடையும் என்ற தகவலையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அயோத்தியும், சரயு நதியும் எனது இதயத்தில் சிறப்பான இடம் பிடித்தவைகள்.  இங்கு எனது பயணத்தை துவங்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன். இவரை போலவே பல முக்கிய பிரபு பிரமுகர்கள் பலரும் அயோத்திக்கு அருகே நிலத்தில் முதலீடு செய்ய உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அயோத்தியில் இடம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். நெட்டிசன்கள் சிலரோ எளிமையாக வாழ்ந்த மனிதர் ராமர், அவர் பிறந்த பூமியை நட்சத்திர விடுதிகளுடன் இப்படி வியாபாரம் ஆக்கிவிட்டீர்களே என்று புலம்பியும் வருகின்றனர்.

Also read: LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

Trending News