நடிகர் ஷாஹித் கபூர் நடித்து கௌதம் தின்னனுரி இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜெர்சி. வரும் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதற்கு ஒரு நாள் முன்பு விஜயின் பீஸ்ட் படமும், ஜெர்சியுடன் ஒரே நாளில் யாஷின் கேஜிஎஃப் 2 படமும் வெளியாகவுள்ளதால் படங்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இதைப்பற்றி ஷாகித் கூறுகையில், ஒரு நல்ல திரைப்படம் எப்போதும் அதன் பார்வையாளர்களை சென்று சேரும். மூன்றில் எந்த படம் சிறந்த படம் என ஒப்பிட்டு பேச முடியாது. சிறந்த படங்கள் நிச்சயமாக வெற்றி பெறும்.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய்யை தான் விரும்புவதாகவும், “நான் ஒரு பெரிய விஜய் ரசிகன் மற்றும் நான் அவரது திரைப்படங்களை விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்றும் கூறியுள்ளார். பீஸ்ட் ஒரு அருமையான படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அது சற்று வித்தியாசமான மார்க்கெட்டிற்கான படம், ஜெர்சி படம் வேறு மார்கெடிற்கான படம் எனவும் கூறினார் . இந்த இரண்டு படங்களுக்கும் ஒப்பிடு இருக்காது எனவும் கூறியுள்ளார்.
கேஜிஎஃப் 2 படத்திற்கும் வாழ்த்து கூறியுள்ள ஷாகித் கபூர், முன்று படங்களுக்கு இடையே போட்டி இல்லை. ஒவ்வொரு படமும் தனக்கான ரசிகர்களை சென்றடையும் என நம்புவதாக கூறியுள்ளார். ஜெர்சி’ ஒரு திறமையான ஆனால் தோல்வியுற்ற கிரிக்கெட் வீரரின் கதையை விவரிக்கிறது, தன்னுடைய மகன் கேட்ட ஜெர்சிக்காக அவர் தனது 30களின் பிற்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் ஆவலுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் களத்திற்கு திரும்ப முடிவு செய்வதே படத்தின் கதை.
தெலுங்கிலும் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2019 ஆண்டு வெளியான ஜெர்சி படத்தை அதன் இயக்குனரான கௌதம் தின்னனுரி ஹிந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்துள்ளனர்.இதனை அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் அமன் கில் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, செல்வராகவன் ஆகியோர் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். யாஷ், ஜாக்கி ஷெராப், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2. இதனை பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார்.