வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பாலிவுட் ஹீரோக்களை அலறவிடும் விஜய்சேதுபதி.. வாய்ப்பு பறிபோகுமோ என்ற பயத்தில் பெரிய தலைகள்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காற்றுவாக்கில் ரெண்டு காதல் படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கும் விக்ரம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

இவ்வாறு விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது மெர்ரி கிறிஸ்மஸ் என்ற பாலிவுட் படத்தில் கத்ரீனா கைப் உடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதியின் அம்மாவாக ராதிகா நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் போட்டோக்கள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.

இதைப் பார்த்த பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய்சேதுபதியை வைத்து நாமும் படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம். ஏற்கனவே விஜய் சேதுபதி இந்த படத்தை தவிர பாலிவுட்டில் மேலும் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரினா கைப் உடன் ஜோடி போட்டுள்ளார். எடுத்த எடுப்பிலேயே விஜய் சேதுபதிக்ககு பாலிவுட்டில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருப்பதால் அங்குள்ள பாலிவுட் நடிகர்கள் தற்போது விஜய் சேதுபதி மீது உச்சக்கட்ட பொறாமையில் இருக்கின்றார்களாம்.

மேலும் பல இயக்குனர்களும் தற்போது விஜய் சேதுபதியை நாடி கதை கூறி வருவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதோ என்ற பயத்திலும் மற்ற நடிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் தான் விஜய் சேதுபதி மாஸ் காட்டி வருகிறார் என்றால் பாலிவுட்டிலும் வேற லெவல் ஆட்டம் காட்டி வருகிறார்.

Trending News