வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குடிக்க விடல.. மாடர்ன் ஆ டிரஸ் போட விடல.. அதுனால விவாகரத்து…

54 வயதான பாலிவுட் நடிகை ஒருவர், ஹாங்காங்கில் பிறந்த இவர், பள்ளி விடுமுறை சமயத்தில் மும்பை வந்திருந்தார். அப்போது, பாலிவுட் இயக்குநர் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் சினிமாவிற்குள் நுழைந்தார். தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.

சிறுவயதில் இருந்தே நடித்து வந்த இவர், 2000ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த ரிஷி சேத்தியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் தனக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறினார். இந்த திருமணத்தால் தன்னுடைய அடையாளத்தையே இழந்து விட்டாராம்.

குடிக்க கூடாது என்று சொன்னார்

என்னிடம் மாடலான உடைகளை உடுத்தக் கூடாது, பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிய வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்தேன். பின், அசைவ உணவுகளையும், மதுப் பழக்கத்தையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார் அதற்கும் சம்மதித்தேன்.

எனக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த பெயரையும் மாற்றுமாறு கூறினார். அதையும் மாற்றி அவருடன் வாழ்ந்து வந்தேன். நான் வெளியில் சென்றால், என்னிடம் நீங்கள் நடிகை தானே என்று யாரவது கேட்டால், நான் நடிகை இல்லை என்று தான் சொல்லவேண்டும் என்று சொன்னார். அதற்கும் சம்மதித்தேன். ஒரு கட்டத்தில், இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று தோன்றியது.

எனக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த பெயரையும் மாற்றுமாறு கூறினார். அதையும் மாற்றி அவருடன் வாழ்ந்து வந்தேன். அதனால், நான் ரிஷி சேத்தியாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறினார்.

ஒரு காலத்தில் பேமஸ் ஆக இருந்த, நீலம் கோத்தாரி தான் தனக்கு நடந்த இந்த துயரமான விஷயங்களை சொல்லி இருக்கிறார். இந்த நிலையில், நெட்டிசன்கள் ஒரு சிலர் இவரை பார்த்து இறக்க பட, இன்னும் ஒரு சிலர் இதை விமர்சித்தும் வருகின்றனர்.

Trending News