ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அதீத அழகால் பட வாய்ப்புகளை தவற விட்ட நடிகை.. இது என்னடா புது கதையா இருக்கு

சினிமாவில் சாதிக்க என்ன வேண்டும். திறமை வேண்டும். பெண்களாக இருந்தால்? அழகு வேண்டும் என்பது எழுதப்படாத நியதியாக உள்ளது. அதீத அழகு இருக்கும் நடிகைகளை சினிமாக்கள் தவற விடுவதில்லை. அவர்கள் டாப் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு நடிகைக்கு, அவரது அழகே ஒரு யமனாக மாறி விட்டது.

பேரழகும், நடிப்பு திறமை இருந்தும் கூட இந்த நடிகையால் சினிமாவில் தான் அடைய நினைத்த உச்சத்தை தொட முடியவில்லை. அவரது அழகே அவருக்கு எதிரியாக மாறியது தான் இந்த கதையில் நம்மை திகைக்க வைக்கும் விஷயம். பேரழகியாக இருப்பதாலேயே பல படங்களில் இருந்து அவர் நிராகரிக்கப்பட்டார்.

ஜெர்மன் தந்தைக்கும், பெங்காலி தாய்க்கும் பிறந்தவர் தான் இந்த பாலிவுட் நடிகை. ஜெர்மன் தந்தையை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் இவரின் தாய், இதன் காரணமாக தனது அம்மா அப்பா இருவரின் குடும்ப பெயரும் தனது சர் நேமாக அந்த நடிகை பயன்படுத்தவில்லை.

தமிழில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மின்னலே படத்தின் இந்தி ரீமேக் 2001ம் ஆண்டு வெளியானது. ‘ரெஹ்னா ஹை தேரே தில் மே’ என்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அந்த நடிகை.

ஆம். நடிகை தியா மிஸ்ரா தான் தனது அதீத அழகால் பட வாய்ப்புகளை தவற விட்டவர். தவற விட்டார் என்று சொல்வதை விட, அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. ல்ல கதை கொண்ட அர்த்தமுள்ள படங்களில் அதிக ஆர்வம் காட்டினார் நடிகை தியா மிர்சா, ஆனால் அந்த படத்தின் இயக்குநர்களோ மிகவும் அழகாக இருப்பதால் படத்தின் அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தமாட்டார் என்று கூறி நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தியா மிஸ்ரா கூறுகையில், “மெயின்ஸ்ட்ரீம்’ நடிகையாக என்னை இயக்குநர்கள் பார்த்ததால், நான் விரும்பிய நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமலேயே போனது” என்று கூறினார். இப்படி இவர் அழகே, இவர் career-க்கு வில்லியாக மாறியது.

இதை கேட்ட ரசிகர்கள் இது என்னடா புது கதையா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News