வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அன்று சர்வர், இன்று பெரிய பாலிவுட் நடிகை.. கோடிகளில் சம்பளம், யார் தெரியுமா?

பொதுவாக பாலிவுட்டில் நெப்போட்டிசம் அதிகமாக இருக்கும். வாரிசுகள் ஆட்சி செய்யும் அந்த இடத்திற்கு ஒரு சாதாரண பெண் போவது அவ்வளவு எளிதல்ல. அப்படியே அவர் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பை அவ்வளவு சீக்கிரத்தில் வர விடமாட்டார்கள்.

ஆனால் இந்த பாலிவுட் க்கு ஒரு சாதாரண சர்வர் பெண் சென்று, பெரிய நடிகையாகவும் மாறியுள்ளார். ஆனால் இவர் திரைப்படங்களை தாண்டி, அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் நடிப்பது தவிர நடனங்களுக்கு ஆடுபவராகவும் இருந்தார்.

கடந்த 1978ஆம் ஆண்டு நமம்பர் 25ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது இயற்பெயர் நேரு பேடா. இவரது தந்தை வோர்லியில் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். சிறு வயது முதலே பல கஷ்டங்களை அனுபவித்தவர் இந்த நடிகை.

சிறு வயது முதலே அவருக்கு இருந்த ஆசை

10 வயது முதலே வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மும்பையில் உள்ள கேட்டரிங் சர்வீசில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்ததாகவும் அதற்கு ஒரு நாளைக்கு தனக்கு ரூ.50 சம்பளம் கிடைத்ததாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அவருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. இதன் காரணமாக அவர் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சினிமாவில் கால் பதித்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆவலாக இருந்த அந்த நடிகைக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நிறம் குறைவாக இருந்ததால் அவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அந்த நடிகையின் பெயர் ராக்கி சாவந்த். இவர் தான் பாலிவுட்டில் கால் பாதிக்க அவ்வளவு பாடு பட்டவர்.
சிகிச்சைக்கு பிறகு ராக்கிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. “அக்னி சக்கரா” திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகான ராக்கி, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது, திரைப்பட பாடல்களுக்கு நடனமாடுவது என பிஸியாக உள்ளார். தற்போது கோடிகளில் சம்பளமும் வாங்குகிறார்.

Trending News