திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷுடன் இணைய ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்.. ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்த சம்பவம்

Lokesh Kanagaraj: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் மாதம் சம்பவத்திற்கு தயாராகி வருகிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து ரசிகர்களின் பிபி-யை ஏற்றி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இப்படம் பற்றிய மற்றொரு ஆச்சர்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது லோகேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த பிரபலங்களையும் ஒன்று திரட்டி லியோவில் நடிக்க வைத்துள்ளார். இதுவே இப்படத்தின் எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

Also read: லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்

அதில் பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ள நிலையில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அனுராக் காஷ்யப்பும் லியோவில் இணைந்தார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் லோகேஷ் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் தான் கொடுப்பார் என்று பேசப்பட்டது.

அந்த வகையில் அனுராக் இந்த வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அதாவது இவர் ஒரு பேட்டியில் லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் ஒரு சிறு காட்சியாக இருந்தால் கூட போதும், நான் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

Also read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

அந்த பேட்டியை பார்த்த லோகேஷ் உடனே அவருக்கு போன் போட்டிருக்கிறார். மேலும் நீங்கள் எங்களுடன் இணைய வாருங்கள் உங்களுக்காக நான் கதையில் ஏதாவது ஒரு மாற்றம் செய்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து தான் அனுராக் லியோ கூட்டணியில் இணைந்து இருக்கிறார்.

இதை தற்போது குறிப்பிட்டுள்ள அவர் படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் சிலாகித்து பேசியுள்ளார். மேலும் இவருடைய கேரக்டர் படத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டவருக்காக லோகேஷ் ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்தது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

Trending News