வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாலிவுட்டால் விஜய் சேதுபதி இடம் ஏற்பட்ட மாற்றம்.. எல்லாம் கத்ரீனா கைஃப் வந்த நேரம் தான்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஆரம்பத்தில் திரையில் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாது. அவ்வாறு தன்னுடைய கடின உழைப்பால் ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து இப்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். அந்த வகையில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி திரைக்க வர இருக்கிறது.

இந்நிலையில் பாலிவுட் பக்கம் சென்றவுடன் விஜய் சேதுபதி இடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது முன்பு எல்லாம் தன்னிடம் கால்ஷீட் கேட்டுக் வருபவர்களிடம் விஜய் சேதுபதி டேட் கொடுத்துவிடுவார். அதோடு மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரம், சிறப்பு தோற்றம் என எதுவாக இருந்தாலும் நடிப்பார்.

Also Read : அரசியல் சதியால் மறுக்கப்பட்ட ஆஸ்கர்.. தில்லாக சொன்ன விஜய் சேதுபதி, அரண்டு போன பாலிவுட்

இதனால் அவருடைய மார்க்கெட்டும் சரிவை சந்தித்தது. ஆனால் இப்போது விஜய் சேதுபதி தனக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை நிராகரித்து இருக்கிறாராம். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார் என்ற பெயர் வந்ததால் இப்போது அதுபோன்ற வாய்ப்பு வந்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம்.

எனவே இப்போது முழுக்க முழுக்க ஹீரோ கதைகளம் வந்தால் மட்டும் தான் விஜய் சேதுபதி நடிக்க ஒற்றுக்கொள்கிறாராம். கத்ரீனா கைப் வந்த நேரம் விஜய் சேதுபதிக்குள் இப்படி ஒரு மாற்றமா என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். விஜய் சேதுபதி சகட்டுமேனிக்கு நடிக்காமல் இது போன்று நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக இன்னும் உயரத்திற்கு செல்வார்.

Also Read : எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க.. விஜய் சேதுபதியை டென்ஷன் ஆக்கிய அந்த ஒரு கேள்வி

Trending News