வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தனி ஒருவன் 2க்கு வில்லனாக பாலிவுட் ஜாம்பவான்.. சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப் வரிசையில் வரும் கமல் ஜெராக்ஸ்

Thani Oruvan 2 Movie: இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படம் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதில் நடித்த சித்தார்த் அபிமன்யு கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அத்துடன் அரவிந்த்சாமி கேரியருக்கு ரீ என்டரியாக மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் என்னதான் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தாலும் அதிக ஹைலைட்டாக இருந்தது வில்லத்தனமான சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான்.

அந்த வகையில் தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைக்கும் இயக்குனர் இதில் ஒரு வெயிட்டான வில்லனை சல்லடை போட்டு தேடிக் கொண்டு வருகிறார். பொதுவாக தான் எடுக்கக்கூடிய படத்தில் ஏதாவது புதுசாக இருக்கணும் என்று யோசிக்க கூடியவர் தான் மோகன் ராஜா. அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகின்றார்.

Also read: நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

மேலும் தனி ஒருவன் 2 படப்பிடிப்பு அக்டோபர் 28ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. அதற்குள் வில்லனை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார். முதல் பாகத்தில் இருந்தது போல் டெரராக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற வில்லன்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே வருகிறது. அதில் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப் ஆகியோர்களும் இருந்தார்கள்.

ஆனால் இயக்குனரின் எண்ணம் இதுவரை வில்லனாக எந்த படத்திலும் நடிக்காதவராகவும், நடிப்பை முழு முயற்சியுடன் கொடுக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று புத்தம் புதிய நடிகரின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார். அப்படி இவருக்கு கிடைத்த ஒரு வில்லன் தான் பாலிவுட் ஜாம்பவான் அமீர்கான்.

Also read: 5 வில்லன்களை மனதில் வைத்து கதை எழுதும் மோகன் ராஜா.. தனி ஒருவன் 2க்கு ஆப்ஷனில் இருக்கும் உலக நாயகன்

ஒருவேளை மோகன் ராஜா யோசித்தபடி தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அமீர்கான் வில்லனாக நடிக்கிறார் என்றால் அப்பொழுதே இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் என்று சொல்லிவிடலாம். எப்படி கமல் சினிமாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறாரோ அதேபோலத்தான் அமீர்கான்.

இவரை கமலின் ஜெராக்ஸ் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்புன்னு வந்துவிட்டால் முழு பங்களிப்பையும் கொடுத்து வெற்றியை பார்க்காமல் விட மாட்டார். அத்துடன் இவரை வில்லனாக பார்ப்பதற்கே ஏராளமான ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள். அந்த வகையில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் தாறுமாறாக வெற்றியை பார்க்க போகிறது.

Also read: சிக்கலில் மாட்டிய மோகன் ராஜா.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெயம்ரவி

Trending News