Deepika Padukone: நம்மில் பலருக்கு தீபிகா படுகோன் என்றால் ஞாபகத்திற்கு வருவது அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தான். அந்த படத்தின் மூலம் தான் தீபிகா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானது. அதன் பின்னர் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜவான் படத்தின் மூலம் மீண்டும் தீபிகா படுகோன் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறார்.
பணத்தை சம்பாதிக்கிறது பெருசு இல்ல, அதை வச்சு நம்ம என்ன செய்றோம் என்றது தான் பெருசு என சொல்வார்கள். ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயின்களாக இருந்து, நிறைய சம்பாதித்த நடிகைகள் இப்போது பார்க்கும்போது பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இருக்கும் நடிகைகள் எல்லோருமே பயங்கர உஷாராக சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
தீபிகா படுகோன் சொத்து மதிப்பு
அப்படி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பல மடங்காக்கி ராணி மாதிரி வாழும் நடிகை தான் தீபிகா படுகோன். ஹிந்தி நடிகர்கள் இடையே அதிகமாக வருமான வரி கட்டுபவர் தீபிகா படுகோன் தான். கடந்த வருடம் இந்தியாவில் இருந்து அதிக வருமான வரி கட்டும் லிஸ்டில் இருந்த ஒரே பெண் இவர் தான். 2016- 17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி மட்டும் தீபிகா 10 கோடி கட்டி இருப்பதாக செய்திகள் வெளியானது.
Also Read:அந்த கேரக்டர் பண்ணினது தப்பு என இதுவரை புலம்பும் 5 நடிகைகள்.. நயன்தாரா வெறுத்து ஒதுக்கிய படம்
கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் தீபிகா படுகோன் 118 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறார். இப்போது அதைவிட சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவரது ஆண்டு வருமானம் வெளியில் சொல்லப்படுவது இல்லை. தீபிகா படுகோன் ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டும் 15 முதல் 20 கோடி சம்பளமாக வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட எட்டு கோடி சம்பளம் இவருக்கு வழங்கப்படுகிறது.
தீபிகா படுகோனுக்கு 16 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா பிரபா தேவி பகுதியில் இருக்கிறது. அவருடைய காதல் கணவர் ரன்வீர் சிங் அவருக்கு 119 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை பரிசளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் 22 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் ஒன்றை தீபிகா படுகோன் வாங்கி இருக்கிறார். இப்போது அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டின் மதிப்பு மட்டும் 40 கோடியாகும்.
இன்றைய நிலவரப்படி தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு மட்டும் 500 கோடி ஆகும். இது மட்டும் இல்லாமல் அவருடைய கணவர் ரன்வீர் சிங்கும் கோடி கணக்கில் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார். தீபிகா படுகோனுக்கு விலை உயர்ந்த நிறைய சொகுசு கார்களும் சொந்தமாக இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பிறந்து, பேட்மிட்டன் வீராங்கனையாக வேண்டும் என ஆசைப்பட்ட தீபிகா தற்போது பாலிவுட் உலகின் ராணியாக இருக்கிறார்.
Also Read:சூதாட்டத்தில் இறங்கிய சூர்யா.. ஜோதிகா மீது கடுப்பில் இருக்கும் சிவக்குமார்