வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்டாக அஜித் தன்னுடைய லுக்கை முற்றிலும் மாற்றியது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டானது.

அதைத்தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் தான் முதல் பாடலாக வெளிவர இருக்கிறது. அதில் அஜித் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பராக டான்ஸ் ஆடி இருக்கிறாராம்.

Also read: விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய அஜித்.. வேகவேகமாக தாடியை எடுத்ததற்கு இதுதான் காரணம்

இதனால் இந்த பாட்டிற்காக ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பற்றி ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தில் அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த படத்திற்குப் பிறகு இனிமேல் வேறு ஒரு அஜித்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்தின் நிஜ வாழ்க்கையும் துணிவு திரைப்படத்தின் கதையோடு சம்பந்தப்படுத்தி இருக்கிறதாம். இதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: கிளீன் சேவ் செய்து அடுத்த படத்திற்கு தயாரான அஜித்.. துணிவு கெட்டப் இனிமே ஸ்கிரீன்ல தான்

மேலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்ற கூறி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருப்பதால் படத்திற்கான ட்ரெய்லரும் விரைவில் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த மாத இறுதியில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் அட்டகாசமாக வெளிவரும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வாரிசு திரைப்படமும் வெளிவர உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இதில் அஜித்துடன் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரும் இணைந்திருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Also read: என்னப்பா இது புது உருட்டா இருக்கு.. அஜித், விஜய்யை பற்றி வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

Trending News