வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

என் பொண்டாட்டிய விட நீங்க தான் அழகு, மேடையில் ஜொள்ளுவிட்ட போனி.. இது என்ன டா மயிலுக்கு வந்த சோதனை!

போனி கபூர் இந்தி சினிமா உலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆவார். பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவராக தான் பரீட்சையமாக தெரியும். இந்திய சினிமாவில் அழகு பதுமையாக இருந்த ஸ்ரீதேவியை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் ஸ்ரீதேவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவி இருந்த வரைக்கும் போனி கபூர் தென்னிந்திய சினிமாவில் அவ்வளவாக கவனம் காட்ட வில்லை. அதிலும் தமிழ் சினிமா பக்கம் வந்ததே இல்லை. அவருடைய மறைவுக்கு பிறகு தான் போனி கபூர் தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். அதிலும் ஸ்ரீதேவியின் பெயரை வைத்தே இவர் உள்ளே வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித்குமார் என்று சொல்லி அவருடைய படத்தை தயாரிப்பதற்காக தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.

Also Read:பெத்த தாயாலே ஸ்ரீதேவிக்கு வைக்கப்பட்ட சூனியம்.. சாவு வரை துரத்திய அந்த கேடு கெட்ட பழக்கம்

தொடர்ந்து அஜித் படங்களை தயாரித்து கல்லா கட்டிய போனி கபூர் தமிழ் சினிமாவில் சம்பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இங்கேயே டேரா போட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இறுதியாக நடிகர் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்களை இவர் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போனி கபூர் உதயநிதியை பற்றியும், மாமன்னன் திரைப்படத்தைப் பற்றியும் பேசியிருந்தார் . உதயநிதி சினிமாவை விட்டு விலகக் கூடாது, என்னுடைய தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Also Read:அம்மாவை போல் வளர முடியாமல் தத்தளிக்கும் 5 வாரிசு நடிகைகள்.. ஸ்ரீதேவி இடத்தை பிடிக்க போராடும் ஜான்வி கபூர்

ஒரு தயாரிப்பாளராக அடுத்த படத்திற்கான வாய்ப்பைக் கேட்ட வரைக்கும் இவர் பேசியதெல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி பேசும்பொழுது என்னுடைய மனைவி ஸ்ரீதேவியை விட கீர்த்தி அழகாக இருக்கிறார் என்று சொல்லி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் வயிற்று எரிச்சலையும் வாரி கொட்டிக் கொண்டிருக்கிறார் போனி கபூர்.

ஸ்ரீதேவி 90களின் காலகட்டத்திலேயே இந்தியில் செட்டில் ஆகி இருந்தாலும் இன்று வரை அவருக்கு தென்னிந்தியாவில் நிறைய ரசிகர்கள் அதிகம். மேலும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் ஸ்ரீதேவி அழகுக்கு நிகராக இதுவரை எந்த நடிகையும் வரவில்லை என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அப்படி இருக்கும் நேரத்தில் அவருடைய கணவரான போனி கபூர் இப்படி வந்த இடத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார்.

Also Read:சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

Trending News