Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மர்ம முடிச்சை விலகவிடாமல் செய்த போனி கபூர்.. உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன் ஆவேசமாக பேசிய கணவர்

மர்ம முடிச்சை விலகவிடாமல் செய்த போனி கபூர்.. உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன் ஆவேசமாக பேசிய கணவர்

Boney Kapoor: போனி கபூர் தயாரிப்பாளர் என்பதை விட ஸ்ரீதேவியின் கணவர் என்றுதான் பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இவர் தற்போது முதல் முறையாக இவருடைய மனைவி ஸ்ரீதேவி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வாயை திறந்து பேசி இருக்கிறார். அதாவது 2018 […]

Boney Kapoor: போனி கபூர் தயாரிப்பாளர் என்பதை விட ஸ்ரீதேவியின் கணவர் என்றுதான் பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இவர் தற்போது முதல் முறையாக இவருடைய மனைவி ஸ்ரீதேவி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வாயை திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது 2018 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி ஹோட்டலில் பாத் டப்பில் தவறி விழுந்து உயிரிழந்து விட்ட விஷயம் பலருக்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு ஒரு விதத்தில் போனி கபூர் காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழும்பி வந்தது.

ஆனால் அங்குள்ள அரசாங்கம் முறைப்படி எல்லா விசாரணையும் செய்து கடைசியில் இயற்கை மரணம் தான் என்று சொல்லிவிட்டார்கள்.

ஸ்ரீதேவியின் பயோபி-க்கு மறுப்பு தெரிவித்த கணவர்

அதன் பிறகு தான் பேச்சுகள் அனைத்தும் அடங்கிப் போனது. இதற்கிடையில் ஸ்ரீதேவியின் பயோபிக் படத்தை எடுப்பதற்கு பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

ஏற்கனவே தமிழ் இயக்குநர்கள் போனிக் கபுரிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்ரீதேவியின் பயோபிக் படத்தை எடுக்க விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதே மாதிரி இப்பொழுதும் தனிப்பட்ட ஒரு விஷயத்தை நான் பப்ளிக்காக கொண்டு போக விரும்பவில்லை.

எனக்கு மட்டும் இல்லை என் மனைவி ஸ்ரீதேவியும் இதை விரும்ப மாட்டார் என்று சொல்லி மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு அவிழ்க்க விடாமல் தடுத்து விட்டார்.

இதனால் கடைசிவரை ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மர்மமாகவே முடிந்து விடப் போகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.