செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நாடகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு தேவையில்லாத கேரக்டரை கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் பாக்யாவின் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார்.

அதாவது இது என்னுடைய மனைவி என் குழந்தை என் உடன் வாழ வேண்டும் என்று பைத்தியக்காரர் மாதிரி சொன்னதுக்கு மேலே சொல்லிக்கிட்டு இருக்கார். இவரிடமிருந்து எப்படி தப்பிக்கிறது என்று தெரியாமல் அமிர்தா நிலை குலைந்து போய் நிற்கிறார். இருந்தாலும் விடாத கருப்பு மாதிரி என் பொண்டாட்டி என் பிள்ளை எனக்கு மட்டும்தான் என்று கணேசன் அனைவரையும் படுத்தி எடுக்கிறார்.

அமிர்தாவுக்கு தன்னுடைய முன்னாள் கணவரை நேரில் பார்த்த சந்தோசம் கொஞ்சம் கூட இல்லை. அத்துடன் அவரிடம் பேசுவதற்கும் தயாராக இல்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் அமிர்தாவை என்னுடன் கூட்டிட்டு போவேன் என்று மல்லுக்கட்டி வருகிறார். இதற்கிடையில் பாவம் எழில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார்.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

அத்துடன் எழிலிடம் கணேசன் சண்டை போட்டு நீ யாரு என் குழந்தைக்கு அப்பாவாக இருக்க முடியும் என்று கேட்கிறார். அது என்னுடைய குழந்தை என்று உரிமை கொண்டாடுவதால் எழில் நிலைகுலைந்து போய் அழுகிறார். இந்த நேரத்தில் இவருக்கு ஆறுதலாக போன கோபியிடம் அப்பா என்று கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிக் கொள்கிறார் எழில்.

இதை பார்ப்பதற்கு உண்மையிலேயே பூரிப்பாக இருக்கிறது. காரணம் இதுவரை எழில், கோபியை எதிர்த்து சண்டை போடுவது தான் அதிகமாக இருந்தது. இவர்களுடைய அப்பா உறவுமுறை எந்த ஒரு இடத்திலும் காட்டப்படாமல் இருந்தது. ஆனால் கோபி தன்னுடைய மகன் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அரவணைப்புடன் பேசியதும், எழில் அறியாமலேயே அப்பாவை கட்டி அணைப்பதை பார்க்கும் பொழுது ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

அதுவும் இந்த நேரத்தில் மகனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் தோள் கொடுக்கும் தோழனாக அப்பா பக்கபலமாக இருப்பது உண்மையிலேயே ஒரு தனி சுகம் தான். அந்த விதத்தில் பாக்யாவியை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு மகன்களுக்கு மிக சப்போர்ட்டாக கோபி நின்னது இத்தனை நாளாக எடுத்த கெட்ட பேர் அனைத்தையும் மாற்றும் விதமாக அமைந்துவிட்டது.

Also read: ஹனிமூன்-க்கு குடும்பத்துடன் போகும் ஜோடி.. ஏழு ஜென்மம் எடுத்தாலும் பாண்டியன் திருந்தவே மாட்டார் போல

Trending News