சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

Kamal, Rajini: குழந்தை நட்சத்திரமாகவே கமல் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் ரஜினி குறுகிய காலத்தில் அவரின் இடத்தை பிடித்து விட்டார். அதாவது கதாநாயகனாக தான் ரஜினி சினிமாவில் நுழைந்தார். அவருடைய ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடித்து போக கொண்டாடத் தொடங்கினர். அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுவிட்டார். இந்த சூழலில் இப்போது உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டில் படங்கள் எடுப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால் அந்த காலத்தை பொறுத்தவரையில் வெளிநாட்டில் படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம். அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் முதன் முதலில் வெளிநாட்டு படங்கள் எது என்பது வெளியாகி இருக்கிறது.

Also Read : இளையராஜா, ஏஆர் ரகுமான் கிட்ட இல்லாதது ரெண்டுமே அனிருத் கிட்ட இருக்கு.. பெருமை பேசி உச்சிக் குளிர்ந்த ரஜினி

அதாவது 1978 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான பிரியா என்ற படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் இப்படமும் ஒன்று. இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதோடு மட்டுமல்லாமல் படமும் வெள்ளி விழா கண்டது. ரஜினியின் முதல் வெள்ளி விழா கண்ட படம் என்ற பெயரையும் பிரியா படம் பெற்றிருந்தது. சினிமாவில் நடிக்க வந்த கமலுக்கு 1979 ஆம் ஆண்டு தான் வெளிநாட்டில் படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது கமலின் நினைத்தாலே இனிக்கும் என்ற படம் தான் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

இந்த படத்தில் ரஜினியும் நடித்திருந்தாலும் கதாநாயகனாக கமல் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இந்த படம் எடுத்து முடிப்பதற்குள் படக்குழு பாடாய்பட்டு விட்டது. இந்த சூழலில் நினைத்தாலே இனிக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை.

மேலும் முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் பிரியா படம் சூப்பர் ஸ்டாரை தூக்கி விட, கமலின் நினைத்தாலே இனிக்கும் படம் காலை வாரிவிட்டது. ஆனாலும் அதன் பிறகு இவர்கள் இருவருமே வெளிநாட்டில் நிறைய படங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : வசூலில் ரஜினியை தோற்கடித்த 2 ஜாம்பவான்கள்.. கூட்டணி சேர்ந்ததால் பதட்டத்தில் திரையுலகம்

Trending News