Arjun’s daughter’s wedding ended: அர்ஜுன் ஹீரோவாக நடித்த காலத்திலிருந்து இப்பொழுது வரை படு பிசியான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் இப்பொழுது இவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஹீரோவுக்கு வில்லனாக தான். ஆனாலும் ஹீரோவுக்கு இணையாக பேசக்கூடிய அளவிற்கு இவருடைய நடிப்பை கொடுத்து வருகிறார்.
வெட்கத்தில் பூரித்துப்போன அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா
அந்த வகையில் லியோ படத்திற்கு பிறகு தற்போது அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் விடாமுயற்சி படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதால் மொத்த டீமும் மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் அர்ஜுன் தற்போது விடாமுயற்சிக்கு பிரேக் விட்டு அவருடைய மகள் கல்யாணத்தை தடபுடலாக நடத்தி வைத்திருக்கிறார்.
அதாவது இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடத்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் அர்ஜுன் வீட்டில் வைத்து பிரம்மாண்டமாக முடிந்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா காதலித்தவரை கரம் பிடிக்கும் வகையில் நேற்று கோலாகலமாக இவர்களுடைய கல்யாணம் முடிந்து விட்டது.
இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் இவர்களுடைய கல்யாண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
தம்பி ராமையாவுக்கு சம்மந்தியான அர்ஜுன்
- ஹரால்டு தாஸுக்கு சம்மந்தியாகிய காமெடி நடிகர்..
- முதல் முதலாக ஆஞ்சநேயரை மறந்த ஆக்சன் கிங்
- வீட்டுக்கு வந்த மகாலட்சுமிக்கு தம்பி ராமையா போட்ட கண்டிஷன்