வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. பெண் இயக்குனரை காண்டாக்கிய வெளிச்ச நடிகர்

வெளிச்ச நடிகரை பற்றிய பேச்சு தான் இப்போது திரையுலகில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. முன்பெல்லாம் அவர் கேரக்டராகவே மாறி உடலை வருத்தி நடிப்பார்.

ஆனால் இப்போது வயதாகி விட்டதாலும் சில பிரச்சனைகள் இருப்பதாலும் முன்பு போல் நடிக்க முடியவில்லை. அதனால்தான் சைக்கோ இயக்குனரின் படத்திலிருந்து இவர் விலகி இருக்கிறார்.

மேலும் எக்ஸ்பிரஷன் மூலம் ஸ்கோர் செய்துவிடலாம். இனிமேல் உடலை வருத்தி நடிப்பதெல்லாம் முடியாது என்ற முடிவுக்கே அவர் வந்துவிட்டார். தற்போது அவர் நடித்திருக்கும் பிரம்மாண்ட படத்தில் ஏகப்பட்ட உழைப்பை கொட்டி இருக்கிறார்.

அதனாலேயே அவர் அடுத்தடுத்த படங்களை ஜாலியாக முடித்து விடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறார். அப்படித்தான் அந்த பெண் இயக்குனரின் படத்திலும் பேசி கமிட்டாகி இருக்கிறார்.

ஆனால் இயக்குனரோ அவரை பெண்டு நிமித்தி இருக்கிறார். இதனால் நொந்து போன ஹீரோ ஆளை விடுங்கடா சாமி என சாக்குப் போக்கு சொல்லி எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதைத்தான் இப்போது நாலு பேர் நாலு விதமாக பேசுகிறார்கள்.

ஏற்கனவே மனைவியின் பேச்சை கேட்டு நடிகர் ஆடிக் கொண்டிருக்கிறார். அதில் இப்போது அவர் பெயரையும் கெடுத்துக் கொள்வது நெருங்கிய வட்டாரங்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News