Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜெயம் ரவியிடம் தடுமாறும் கவின்.. பிரதர், பிளடி பக்கர் 5வது நாள் வசூல்

ஜெயம் ரவியிடம் தடுமாறும் கவின்.. பிரதர், பிளடி பக்கர் 5வது நாள் வசூல்

Jayam Ravi : அமரன் பட வெற்றியால் பிரதர் மற்றும் பிளடி பக்கர் படங்களின் வசூல் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கவின் மிகவும் பின்தங்கி இருக்கிறார். இப்போதுதான் ஒரு அபரிவிதமான […]

Jayam Ravi : அமரன் பட வெற்றியால் பிரதர் மற்றும் பிளடி பக்கர் படங்களின் வசூல் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கவின் மிகவும் பின்தங்கி இருக்கிறார். இப்போதுதான் ஒரு அபரிவிதமான வளர்ச்சியை கவின் அடைந்து வந்தார்.

கண்பட்டது போல் பிளடி பக்கர் படம் மோசமான விமர்சனங்களை பெற்று வசூலில் திணறி வருகிறது. வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த நெல்சன் முதல் முறையாக தயாரிப்பாளராக களம் இறங்கி ப்ளடி பக்கர் படத்தை தயாரித்தார். ஆனால் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் கவின் திணறி வருகிறார்.

அந்த வகையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 2.2 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளில் 1.8 கோடி வசூலை பெற்றது. மேலும் மூன்றாவது நாளில் 1.19 கோடியும், நாலாவது நாளில் 0.62 கோடியும் வசூல் செய்திருந்தது. ஐந்தாவது நாள் முடிவில் வெறும் 0.22 கோடியும் பெற்றது‌.

பிரதர், பிளடி பக்கர் 5வது நாள் வசூல்

மேலும் இதுவரை பிளடி பக்கர் படம் 6 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஜெயம் ரவியின் பிரதர் படம் 8.2 கோடி வசூலை இதுவரை பெற்றிருக்கிறது. ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா, நட்டி நடராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இந்த படம் 2.5 கோடியும், இரண்டாம் நாளில் 2.2 கோடியும் வசூலை ஈட்டி இருந்தது. அடுத்ததாக 1.9 கோடி வசூலை மூன்றாவது நாளும், நான்காவது நாளில் 0.97 கோடியும் ஈட்டியது. ஐந்தாவது நாளில் 0.5 கோடியும் வசூல் பெற்றது.

மேலும் ஜெயம் ரவி ஒரு நடுநிலையான கலெக்ஷனை பிரதர் படம் மூலம் பெற்றிருக்கிறார். அமரன் படத்தின் வரவேற்பு மற்றும் லக்கி பாஸ்கர் படத்தின் காட்சிகள் தமிழ்நாட்டில் அதிகப்படுத்தியதால் பிரதர் மற்றும் பிளடி பக்கர் படத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் சரிவை சந்திக்க உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.