சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கோபத்தை எல்லாம் பொசுக்கிற படமாய் இருக்கணும் தம்பி.. சொல்லிக் கொள்ளும்படி சாதிக்காத அதிதி சங்கர்

Aditi Shankar: அப்பாவின் புகழுடன் சினிமாவிற்கு அடி எடுத்து ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறார் அதிதி சங்கர். ஆனால் இவர் படித்ததோ மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு. அதை பெயருக்காக மட்டும் படித்துவிட்டு, சினிமாவில் ஈசியாக நடிக்க வந்து விட்டார். இவர் நடிப்பது இவருடைய அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் தாஜா பண்ணி டைம் கேட்டு நடிக்க வந்திருக்கிறார்.

அவரும் தன் மகளின் ஆசைப்படி நடிக்கட்டும் என்று வேண்டா வெறுப்பாக சம்மதத்தை கொடுத்தார். ஆனால் அதிதி சங்கர் ஹீரோயினாக ஜெயித்தாரா என்பதுதான் முக்கியம். அதாவது சினிமாவைப் பொறுத்தவரை ஈசியாக உள்ளே நுழைந்தாலும் படிப்படியாக அடி மேல் அடிவாங்கி பட்டு வளர்ந்தவர்கள் தான் அதிகமானவர்கள். அதனால் தான் என்னமோ அதிதி சங்கர் நடித்த படங்களில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

Also read: அப்பாவின் டார்ச்சர் தாங்கல.. சிக்காமல் சிட்டாய் பறந்த அதிதி சங்கர்

இதை பார்த்து சங்கருக்கு தன் மகள் நம் பேச்சைக் கேட்காமல் இஷ்டத்துக்கு இருக்கிறார் என்று இவரை நினைத்து ஒவ்வொரு நாளும் சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் கூடிய விரைவில் இவருக்கு திருமணம் செய்துவிடலாம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது கிடைத்த சான்ஸை பயன்படுத்திக் கொண்டால் சினிமாவில் ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கலாம். இல்லையென்றால் கூடிய விரைவில் மூட்டை முடிச்சை கட்டிட்டு போக வேண்டியதுதான்.

இப்படி இவர் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து விட்டார். இதனால் வரிசையில் நின்று கொண்டிருந்த புதுப்புது இயக்குனர்கள் பின்னுக்குப் போய்விட்டார்கள். அதற்கு காரணம் விஜய்யின் மகன் என்று அனைவரது பார்வையும் இவர் பக்கம் திரும்பியதால் தான்.

Also read: விவாகரத்து நடிகருடன் ஜோடி போடும் அதிதி சங்கர்.. மாவீரனுக்கு பிறகு வரிசை கட்டும் வாய்ப்புகள்

அதற்கு ஏற்ற மாதிரி லைக்கா நிறுவனமும் இவருடன் இணைந்து விட்டது . இப்படி இவர் அடியெடுத்து பொழுதே வெற்றியை பார்க்கத் தொடங்கி விட்டார். அந்த வகையில் இவர் இயக்கக்கூடிய முதல் படம் சூப்பர் ஹிட் ஆக இருக்க வேண்டும். இல்லையென்றால் பலபேர் சாபத்துக்கும், கோபத்துக்கும் ஆளாக கூடிய நிலைமை வந்துவிடும்.

அதனால் முதல் படத்தை தெறிக்க விடும் வகையில் எடுத்து அப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என உறுதியாக நினைக்கிறார். மேலும் சிபாரிசில் வந்தவர் தானே அதனால் தான் திறமை இல்லை என்று யாரோட சொல்லுக்கும் ஆளாகிடக்கூடாது என்பதில் முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார். அப்படி இவர் ஜெயித்து விட்டால் வரிசை கட்டி நிற்கின்ற இயக்குனர்கள் ஓரளவு சாந்தமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: நடிக்கிற படத்தில் முதல் அக்ரீமெண்ட்டே இதுதானா.? மாவீரன் பட பூஜையிலேயே பிட்டு போட்ட அதிதி சங்கர்

Trending News