வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

இப்படி பண்ணிட்டியே தனம்.. ஹார்ட் ஆபரேஷன் முடிந்த பிறகு கலங்கிய அண்ணன்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக இருப்பதைப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், அந்த சீரியலை தவறாமல் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் தற்போது முல்லைக்காக கடன் வாங்கி 5 லட்சம் மருத்துவச் செலவு செய்ததால் அதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு கதிர்-முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

தம்பி தன்னை விட்டு பிரிந்து சென்றானே என்பதை தாங்கமுடியாத மூர்த்தி, அதை நினைத்து மனவேதனை பட்டதால் திடீரென்று அவனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வந்த கதிர்-முல்லை இருவரையும் தனம் மறுபடியும் வீட்டுக்கு வர சொன்னாள்.

ஆனால் கதிர் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாமல், வீட்டிற்கு வரமாட்டேன் என சொன்னதால் கோபத்தில் தனம் அவர்களை மூர்த்தியை பார்க்கவிடாமல் செய்து, ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினாள். பிறகு மூர்த்திக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவன் கண் விழிக்கும் நேரம் வரை அங்கேயே காத்திருந்த கதிர் அண்ணன் சுய நினைவுக்கு வரும் வரை யாருக்கும் தெரியாமல் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கிடையில் ஆபரேஷன் முடிந்த பிறகு தனத்தை அழைத்துப் பேசிய மூர்த்தி, அவர்களை விட்டுவிட்டு மூர்த்தி சென்று விடுவார் என நினைத்தார்களா என கேள்வி எழுப்ப, தனம் ‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா’ என அழுகிறாள். பிறகு தனம் கதிர் ஹாஸ்பிடலுக்கு வந்தான் என மூர்த்தியிடம் சொல்கிறாள்.

எங்க அவன் என மூர்த்தி ஆர்வமுடன் கேட்க, தனம் அவர்களைத் திட்டி அனுப்பிய விஷயத்தை சொல்கிறாள். இப்படி பண்ணிட்டியே தனம் என மூர்த்தி தனம் செய்த செயலை நினைத்து கலங்குகிறான். இருப்பினும் கதிர், முல்லைக்காக வாங்கிய கடனை வெளியூர் சென்று சம்பாதித்து அதை அடுத்து மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுடன் சேர்ந்து வாழத்தான் போகிறான்.

ஏற்கனவே இது போன்று தான் கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட போது அவர்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து சந்தோசமாக வாழ்கின்றனர் அதைப் போன்று கதிர் முல்லையும் மறுபடியும் மூர்த்தி விரும்பும்படி வீட்டிற்கு திரும்புவார்கள்.

Trending News