சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

10 லட்சத்தை தட்டி தூக்கிய தம்பி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் 5 லட்சம் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று கிளம்பிய கதிர்-முல்லை இருவரும் புதிதாக துவங்கிய ஹோட்டலில் எந்த லாபமும் அவர்களால் பார்க்க முடியவில்லை.

ஆகையால் முல்லை எதார்த்தமாக நியூஸ் பேப்பரில் 10 லட்சத்துக்கான சமையல் போட்டிக்கான விளம்பரத்தை பார்த்து அதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து விடுகிறார். அதன்பிறகு சமைப்பதில் கை தேர்ந்தவராக மாறிய கதிரை அந்த போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார்.

Also Read: இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

தொடக்கத்தில் மறுத்த கதிர், அதன்பிறகு இந்த போட்டியில் ஒரே முறை வெற்றி  பெற்று விட்டால் மீண்டும் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து விடலாம் என்கின்ற கனவுடன் அந்த போட்டியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் எனத் துடிக்கிறார்.

அவர் நினைப்பது போல் இரண்டு சுற்றுகளில் முன்னிலை வகித்த கதிர், கடைசியில் அந்த போட்டியில் வெற்றி பெற்று 10 லட்சத்துடன் வீடு திரும்புகிறார். வீட்டிற்கு வந்த கதிர்-முல்லை இருவரும் இதுதான் அவர்கள் கடைசியாக இந்த வீட்டில் தனியாக வாழும் இரவு என்றும் அடுத்த நாள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழ போகிறோம் என்று கனவு காண்கின்றனர்.

Also Read: விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

அதன் பிறகு அடுத்த நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிதாக வாங்கும் மனையின் பத்திரப்பதிவு என்பதால் பத்திர ஆபீஸில் குடும்பமே கிளம்பி சென்றது. அங்கு கதிர்-முல்லை இருவரும் சென்று தங்கள் வென்ற 10 லட்சம் பரிசுத் தொகையை அண்ணனிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடிச்ச 10 லட்ச  ஜாக்பாட் அவர்களுக்கு பெரிய தொகையாக தெரிகிறது. அதை வைத்து அவர்கள் பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி அதில் சந்தோசமாக வாழ போகின்றனர்.

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

Trending News