5 Villain Actors: 90ஸ் காலத்தில் நடித்த வில்லன்களை பார்த்தாலே நமக்கு தோன்றியது, இது என்ன இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள். நிஜமாகவே இவருடைய கேரக்டர்கள் இப்படித்தான் இருக்கும் போல என்று சொல்லி வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்து விடுவோம். அந்த அளவிற்கு கொடூரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஆன இப்போதுதான் தெரிது இதெல்லாம் சும்மா நடிப்பு தான் என்று. அதற்கு ஏற்ற மாதிரி அந்த வில்லன்கள் நிஜத்திலே ஜென்டில்மேன் ஆக வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வில்லன்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ஆனந்த்ராஜ்: அந்த காலத்தில் இவர் வில்லனாக நடித்த கதாபாத்திரங்கள் முக்கால்வாசி எப்படி இருக்கும் என்றால் பெண்களை கடத்தி செல்வது, அவர்களிடம் தவறாக நடந்து கொள்வது என்று சகிக்க முடியாத அளவிற்கு கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். முக்கியமாக மாநகர காவல் படத்தில் இவருடைய லுக்கே பார்த்தாலே குழந்தைகள் ரொம்பவே பயந்து போய் நடுங்கிய காலம் எல்லாம் இருக்கிறது. அதிலும் பாட்ஷா படத்தில் ரஜினியின் தங்கையை துன்புறுத்தும் விதமாக இந்திரன் கேரக்டரில் வில்லனாக நடித்து மொக்கை வாங்கி இருப்பார். ஆனால் தற்போது காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டு நிஜத்தில் ஒரு நல்ல கேரக்டராகவே வாழ்ந்து வருகிறார்.
கிஷோர் குமார்: பொல்லாதவன், வடசென்னை, கபாலி போன்ற பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானார். அத்துடன் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து இவருடைய நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார். தொடர்ந்து இவருக்கு பெருசாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து பெயர் வாங்கினார். முக்கியமாக வில்லன் கேரக்டரில் அதிகமாக நடித்திருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் தோட்டம், வயல் என பசுமையான வாழ்க்கையே வாழ்ந்து ஜென்டில்மேன் ஆக நிரூபித்துக் காட்டி விட்டார்.
பசுபதி: தூள், விருமாண்டி, திருப்பாச்சி, அருள், கொடிவீரன் மற்றும் சுள்ளான் போன்ற பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டும் அளவிற்கு அடித்து தூள் கிளப்பி இருப்பார். இவர் ஹீரோ, குணச்சித்திர கேரக்டர், காமெடி மற்றும் வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பிரபலமாகிவிட்டார். இவரை பார்ப்பதற்கு முரட்டு வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஒரு சாந்தமான நகைச்சுவை கேரக்டராக தான் சுற்றி வருகிறார்.
நாசர்: ஒரு நேரத்தில் புத்தியை கத்தி போல் தீட்டி கொடூர வில்லனாகவும், வக்கிர புத்தியால் மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் கேரக்டராகவே பல படங்களில் நடித்து வந்தார். அதனால்யே நாசர் என்றால் சரியான வில்லன் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கினார். ஆனால் இவரிடம் பழகினவர்கள் சொன்னது எல்லாமே நடிப்பு சூறாவளி போல் இருக்கும். பழகி பார்த்தால் தன்மையுடன் இருப்பார் என்று பலரும் இவரைப் பற்றி புகழ்ந்து இருக்கிறார்கள்.
பொன்வண்ணன்: எத்தனை வருடங்கள் ஆனாலும் சில படங்களை மட்டும் எப்பொழுதுமே மறக்க முடியாது. அப்படி பேர் சொல்லும் படமாக வெற்றி பெற்றதுதான் கருத்தம்மா. இதில் கொடூர வில்லனாகவும், அரக்கன் புத்தியைக் கொண்ட கேரக்டரிலும் பொன்வண்ணன் நடிப்பை வெறுக்கும் படியாக கொடுத்திருப்பார். ஆனால் நிஜத்தில் ஒரு சிறந்த மனிதராகவும் நல்ல குடும்பத் தலைவராகவும் நிரூபித்துக் காட்டி வருகிறார்.
Also read: நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக கொண்டாடப்படும் 5 வில்லன்கள்.. தெய்வமாக கை கொடுத்த அருந்ததி பசுபதி