புதன்கிழமை, நவம்பர் 27, 2024

7 புதிய சேவைகளை அறிமுகப்படுத்திய BSNL.. புது லோகோ உடன் கொண்டு வரப் போகும் 5G

BSNL: அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை அக்டோபர் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பிஎஸ்என்எல் புதிய லோகவையும், 7 புதிய சேவைகளையும் அமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்.

அதன்படி பழைய லோகோவில் சாம்பல் நிறத்தில் இருக்கும் வட்டத்தை சுற்றி சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் குறிகள் இருக்கும். மேலும் பிஎஸ்என்எல் என்ற பெயரின் கீழே கனெக்டிங் 2 இந்தியா(connecting to India) என எழுதப்பட்டிருக்கும். ஆனால் தற்போது மாற்றப்பட்ட புதிய லோகோவில் காவி கலரில் வட்டமும் அந்த வட்டத்திற்குள் இந்திய நாட்டின் வரைபடமும் அதற்கு மேல் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் குறிகளும் இருக்கிறது. இதை பார்க்கும் பொழுது நமது தேசிய கொடியை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது.

அத்துடன் இதில் கனெக்டட் டு இந்தியா என்ற வாக்கியத்திற்கு பதிலாக கனெக்டிங் டு பாரத்(connecting to Bharat) என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க்,
என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், பிஎஸ்என்எல் ஐஃஎப்டிவி (BSNL IFTV), பைபர் டு தி ஹோம், பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை.

இதில் மிக முக்கியமானதாக இருப்பது ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க். இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மோசடியாளர்களிடமிருந்து தப்பிக்க மிகவும் உதவியாக இருக்கும். அடுத்ததாக டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மட்டும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்க்கில் மூலம் எளிதாக பெறலாம்.

ஏற்கனவே 4g அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களில் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி 7.5 மில்லியனிலிருந்து 18 மில்லியனாக உயர்ந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் கூடிய விரைவில் 5g நெட்வொர்க் மாறப்போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News