தளபதி விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாகுவதால், அது குறித்து தளபதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நீண்ட வருடத்திற்கு பிறகு பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி நிகழ்ச்சி தற்போது சோசியல் மீடியாவில் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மதியம் பிரியாணி விருந்து அளித்தார். அப்போது விஜய் மன்ற இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை விட செம கெத்து காட்டி இருக்கிறார். இந்த வீடியோவை வைத்து ப்ளூ சட்டை மாடல் ரோல் செய்தது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது.
Also Read: இறங்கிவர நினைத்த விஜய்.. பிடிக்காததை மறுபடியும் செய்யும் எஸ்ஏசி!
இந்த நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் காலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது அனைவரும் அவருக்கு மரியாதை கொடுப்பதை பார்த்தால், விஜய்யை விட கொஞ்சம் ஓவராகவே புஸ்ஸி ஆனந்த் கெத்து காட்டுவது போல் தெரிந்தது.
இந்த வீடியோவை வைத்து அஜித் ரசிகர்களும், பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் ட்விட்டர் பக்கத்தில் பங்கம் செய்துள்ளனர். கடந்த பல வருடங்களாக விஜய்யின் அத்தனை செயல்பாட்டிற்கும் மூளையாக செயல்படுபவர் புஸ்ஸி ஆனந்த் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
Also Read: துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்
இவர் விஜய்யின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் புதுச்சேரியின் எம்எல்ஏ-வாக இருந்தவர். முதலில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக எஸ்ஏ சந்திரசேகர் இருந்தபோது அவரால் அந்த இயக்கத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தான் புஸ்ஸி ஆனந்த்.
அதன் பிறகு இவருக்கும் விஜய்க்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இப்போது விஜய்யின் அனைத்து முக்கிய முடிவிற்கும் ஆலோசனை தருவதும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை வழி நடத்துவதும் புஸ்ஸி ஆனந்த் தான். ஆகையால் தான் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் விஜய்க்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இவருக்கும் கொடுக்கின்றனர்.
வீடியோவை வைத்து ட்ரோல் செய்யும் ப்ளூ சட்டை மாறன்!
